எதிர்நீச்சல் 2 சீரியலில் குணசேகரன் போட்ட தூண்டில், பயந்து ஓடும் கதிர்.. 4 பெண்களுக்கு அரசி வச்ச செக்

ethirneechal 2 (4)
ethirneechal 2 (4)

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் தர்ஷன் உடைய கல்யாண விஷயமாகத்தான் பரோலில் வந்திருக்கிறார். அதிலும் இவர் வருவதற்கு முக்கிய காரணம் போஸ்டர் பெரியசாமி கொடுத்த ஐடியா. அத்துடன் தன்னுடைய மகனுடைய வாழ்க்கைக்கு விடை கிடைத்து விடும் என்று எண்ணிய குணசேகரன், அறிவுக்கரசி சொல்வதற்கெல்லாம் தலையாட்டி வருகிறார்.

இன்னொரு பக்கம் கதிரை கண்மூடித்தனமாக நம்பியதால் எல்லா சொத்துக்களின் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார். ஆனால் தற்போது முறைப்படி யாருக்கு என்ன சேர வேண்டும் என்பதை எழுதிக் கொடுத்து விடலாம் என்று குணசேகரன், கதிரிடம் ஏற்பாடு பண்ண சொல்லி இருக்கிறார். ஆனால் கதிரைப் பொறுத்தவரை அண்ணனிடமிருந்து எல்லா சொத்துக்களையும் அபகரித்து விட்டு குணசேகரை செல்லாக் காசாக்க உட்கார வைத்து ராஜ்ஜியம் பண்ண வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது.

அதன்படி மாமனார் பேச்சு கேட்டு காய் நகர்த்தி வருகிறார். கதிர் என்னென்ன தில்லாலங்கடி வேலை பண்ணுகிறார் என்று அறிவுக்கரசிக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் கதிருக்கு சப்போர்ட் பண்ணி குணசேகரை கவுப்பதற்கு கூட்டணி போட்டு விட்டார். அத்துடன் தர்ஷனும் தற்போது குணசேகரை நம்புவதை விட கதிரையும் அறிவுக்கரசியும்தான் நம்பி இருக்கிறார். ஆக மொத்தத்தில் கதிர் நினைத்தபடி எல்லாம் நடக்கிறது.

ஆனால் குணசேகரன், தர்ஷன் கல்யாண விஷயத்தை பார்க்கும் பொறுப்பை சக்தியிடம் ஒப்படைத்திருக்கிறார். அத்துடன் அதற்கான செலவுகள் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்று ஞானத்திடம் பொறுப்புகளை கொடுக்கிறார். அதனால் இப்போதைக்கு தெரிஞ்சவரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி அதை ஞானத்திடம் ஒப்படைத்து கதிரை பேங்கில் இருந்து பணத்தை எடுத்துட்டு வரச் சொல்லி திருப்பிக் கொடுத்து விடலாம் என்று சொல்கிறார்.

எப்படி இவர்கள் அனைவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட கதிர் இவங்க கிட்ட இப்போ மாட்டிக்கிட்டா நம்ம தலையில மிளகாய் அரைச்சிடுவாங்க என்ற பயத்தில் துண்ட காணோம் துணிய காணோம் என்று அப்படியே ஓடிப் போய்விட்டார். இதன் பிறகு மாமனாரிடம் போய் புலம்பிய நிலையில் அவர் ஐடியா கொடுப்பார். ஆனாலும் பரோலில் வந்திருக்கும் குணசேகரனுக்கு ஆப்பு வைக்கும் விதமாக கதிர் செய்த துரோகம் தெரிய வரப்போகிறது.

அடுத்ததாக வீட்டை விட்டு வெளியே வந்து வாசு இருந்த வீட்டில் குடியிருக்கும் நான்கு பெண்களுக்கு செக் வைக்கும் விதமாக அறிவுக்கரசி அந்த வீட்டு ஓனரிடம் மிரட்டி அவர்களை காலி பண்ண பிளான் பண்ணி விட்டார். அந்த ஓனர் வீட்டிற்கு வந்து நான்கு பேரையும் காலி பண்ண சொல்லி கொடுத்த அட்வான்ஸ் செய்யும் திருப்பிக் கொடுக்கிறார். இதனால் எங்க போவது என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழிக்கும் ஜனனிக்கு கௌதம் வந்து உதவி செய்யப் போகிறார்.

Advertisement Amazon Prime Banner