முதல்முறையாக டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த எதிர்நீச்சல் 2.. மகா சங்கமத்தால் மாஸ் காட்டும் சன் டிவி

Serial Trp Rating List: சின்னத்திரை மூலம் மக்களை கவர்ந்து வரும் சீரியலுக்கு எப்பொழுதுமே அமோக வரவேற்பு கிடைக்கும். அதனால்தான் ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு எக்கச்சக்கமான சீரியல்களை கொண்டு வருகிறார்கள். இதில் யார் பெருசு என்று அடித்து காட்டும் விதமாக ஒவ்வொரு வாரமும் வெளிவரும் டிஆர்பி ரேட்டிங் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் எந்த சீரியல்கள் முதல் ஆறு இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

எதிர்நீச்சல் 2: இரண்டாம் பாகம் வந்ததிலிருந்து இப்பொழுதுதான் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது என்பதற்கு ஏற்ப முதல் முறையாக மாஸ் காட்டுகிறது. அந்த வகையில் தர்ஷன் காணாமல் போன விஷயம், ஈஸ்வரி குணசேகரன் மூலம் அனுபவிக்கும் டார்ச்சர். ஜீவானந்தம் எண்டரி போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்கள் எல்லாம் அடுத்தடுத்து வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் 7.50 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை பெற்றிருக்கிறது.

அய்யனார் துணை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்களின் பேவரிட் சீரியலாக அய்யனார் துணை இருக்கிறது. இந்த வாரம் பல்லவனின் ரகசியம் வெளியான நிலையில் ஒட்டுமொத்த குடும்பமும் கவலையே மறப்பதற்காக கடற்கரைக்கு போகிற காட்சிகள் மற்றும் நிலா குடும்பத்தில் இருப்பவர்களும் அதே இடத்திற்கு போகிறார்கள். இதனால் நிச்சயம் ஒரு கலவரம் வெடிக்க போகிறது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.62 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை: விஜயா கேட்டபடி ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும் என்று ரோகிணி பணத்திற்காக முருகனிடம் கேட்டார். முருகன் இந்த விஷயத்தை வித்தியாவிடம் சொன்ன நிலையில் ரோகிணி வித்யாவிற்கும் விரிசல் வர ஆரம்பித்துவிட்டது. உடனே ரோகிணி, விஜயாவுக்கும் முருகனுக்கும் பணத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக சுருதியிடம் இரண்டு லட்ச ரூபாய் கேட்கிறார். ஆனால் ஸ்ருதி, பணம் இல்லை என்று ரோகினியை அவமானப்படுத்தி விடுகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.87 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

கயல்: மூர்த்திக்கு எப்படியாவது ஹோட்டலை ஆரம்பிப்பதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சமையல் போட்டியில் கயல் சேர்ந்தார். கயலுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக எழில் கூடவே இருந்து உதவி செய்து வருகிறார். ஆனால் கயல் ஜெயிக்க கூடாது என்று பல சதி வேலைகள் நடக்கிறது. இருந்தாலும் எல்லாத்தையும் முறியடித்து கயல் எழில் ஜெயித்து மூர்த்தியிடம் பணத்தை கொடுத்து ஹோட்டலை ஆரம்பிக்க சொல்வார்கள். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.27 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

சிங்க பெண்ணே: மகேஷ், லலிதாவிடம் அன்பு ஆனந்தியை ஒன்று சேர்க்கும் விதமாக கெஞ்சுகிறார். உடனே லலிதா, துளசியின் அக்கா கல்யாணம் வரை நான் வெயிட் பண்ணுகிறேன். அதன் பிறகு என் மகனே ஆனந்தி கல்யாணம் பண்ண வேண்டும். இல்லையென்றால் துளசிக்கும் அன்புக்கும் நான் கல்யாணத்தை பண்ணி வைத்து விடுவேன் என்று கண்டிஷன் போட்டு விடுகிறார். ஆனால் ஆனந்தி என்ன ஆனாலும் நான் அன்புக்கு துரோகம் பண்ண மாட்டேன் என்று விவாதமாக இருக்கிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.63 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு மருமகள்: கடந்த வாரம் மகா சங்கமாக ஆரம்பித்த மூன்று முடிச்சு மற்றும் மருமகள் சீரியல் மக்கள் எதிர்பார்த்தபடி மாசு காட்டி வருகிறது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் சன் டிவி நினைத்தபடி அதிகமான புள்ளிகளை பெற்று விட்டது. இந்த வாரம் இந்த மகா சங்கமம் 9.80 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →