Gunasekaran: எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி அனைவரும் நீதிமன்றத்தில் ஒன்று கூடுகிறார்கள். இதனிடையே சாரு பாலா உடன் குணசேகரனின் தங்கை ஆதிரையும் வந்து அனைவரையும் சந்திக்கிறார். கதிர், ஞானம், கரிகாலன் வெட்டுக்குத்துக்கு வந்தது போல் காரிலிருந்து இறங்குகிறார்கள்.
இதனிடையே கோர்ட்டில் சாருலதாவிடம் குணசேகரனைப் போன்ற பெரிய ஆட்களை எதிர்த்து நிற்காதீர்கள் என சக கருப்பு கோட் போட்ட வக்கீல்கள் பயமுறுத்துகிறார்கள். எதற்கும் அஞ்சா பெண்ணாக துணிந்து நிற்கிறார் சாரு பாலா.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குணசேகரன் நீதிமன்றம் வருகிறார். இதுவரை தலைகுனியாத எம்டனாக இருந்த அவர் முதல் முறையாக கூண்டில் ஏறி அவமானப்பட்டு நிற்கிறார். மறுபுறம் கிள்ளிவளவனை விசாரிக்கும் போது எல்லா உண்மைகளையும் போட்டு உடைக்கிறார்.
குணசேகரன் சொல்லித்தான் ஜீவானந்தத்தின் மனைவியை கொன்றதாக கிள்ளிவளவன் கோட்டிலேயே அத்துமீறி அவருக்கு எதிராக சாட்சி சொல்லிவிட்டார். சாட்சி வலுவானதால் ஏ1 குற்றவாளியான குணசேகரனுக்கு குறைந்தது 6 வருட கடுங்காவல் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும்.
கிள்ளிவளவன் காலை வாரிவிட்டும், காப்பாற்றும் எம்டன்
தம்பிகள் தான் நம்மளை காப்பாற்றக்கூடிய நபர்கள் என புரிந்து கொண்ட குணசேகரன் அப்படியே அந்தர் பல்டி அடித்து சூழ்ச்சி செய்கிறார். கிள்ளிவளவனிடம் நான் சொல்லித்தான் நீ கொலை செய்தாய் இதில் என் தம்பியை இழுக்காதே, எல்லாத்துக்கும் காரணம் நான் தான் என தம்பி கதிரை காப்பாற்றும்படி திட்டம் போட்டு கூண்டில் நின்று பேசுகிறார்.
தம்பிகளை காப்பாற்றி விட்டால்தான் நம் பக்கம் நிற்பார்கள் என நினைக்கிறார் குணசேகரன். இதனிடையே ஈஸ்வரி, ஜனனி என அனைவரும் குணசேகரனுக்கு எதிராக தங்கள் வாக்குமூலத்தை கொடுத்து நியாயத்தை நிலை நாட்டுகிறார்கள்.
- குணசேகரனை பெண் சிங்கமாக வேட்டையாடிய ஜனனி
- எதிர்நீச்சல் பிரபலங்கள் வாங்கும் சம்பளம்
- எதிர்நீச்சல் சீரியலை பாழாக்கிய 6 விஷயங்கள்