வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எதிர்நீச்சல் குணசேகரன் இயக்கிய 2 தரமான ஹிட் படங்கள்.. பிரசன்னாவை நடிகனாய் மாற்றிய தரமான கதை

பொதுவாகவே சில நடிகர்கள் வெள்ளித்திரையில் நடித்த பிறகு கொஞ்சம் காலங்கள் கழித்து சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டி வருவார்கள். ஏனென்றால் சினிமாவில் சாதிக்க முடியாததை நாடகத்தின் மூலம் சாதித்து காட்ட வேண்டும் என்று நம்பிக்கையில் வருவார்கள். அப்படி வந்த சில நடிகர்கள் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் மிகவும் பரிச்சியமாய் இருக்கிறார்கள்.

இப்பொழுது சன் டிவியில் ஒவ்வொரு நாளும் ஆர்வத்தை தூண்டக்கூடிய சீரியலில் நம்பர் ஒன் இடத்தை எதிர்நீச்சல் தக்க வைத்து வருகிறது. அந்த சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குணசேகரன் என்பவர் வில்லனாக நடித்து மிரட்டி வருகிறார். இவர் வில்லனாக நடித்தாலுமே இவர் நடிப்பை பார்ப்பதற்கு ஏராளமானவர் தவம் இருந்து வருகிறார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவருடைய நடிப்பு எதார்த்தமாக அமைந்திருக்கிறது.

Also read: குணசேகரனின் மூக்கை உடைத்த சக்தி.. சல்லி சல்லியாக உடையும் எதிர்நீச்சல் குடும்பம்

ஆனால் இவருடைய உண்மையான பெயர் மாரிமுத்து. இவர் இதில் நடிப்பதற்கு முன்னதாகவே சினிமாவில் இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். 2008 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் பிரசன்னா, உதயதாரா, வடிவேலு, சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. இந்த படம் பிரசன்னாவுக்கு சினிமா கேரியரில் ஒரு படிக்கட்டாக அமைந்தது.

இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு புலிவால் என்ற திரைப்படத்தை இவர்தான் இயக்கினார். இப்படத்தில் விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர் இயக்கிய இரண்டு படங்களிலும் பிரசன்னாவிற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். இதன் மூலம் பிரசன்னாவிற்கு ஒரு தரமான ஹிட் படமானது.

Also read: டிஆர்பியில் அடித்து துவம்சம் பண்ணும் எதிர்நீச்சல்.. இந்த சீரியலுக்கு முதுகெலும்பாக இருக்கும் பிரபலங்கள்

இதற்கு முன்னதாக இவர் மணிரத்தினத்திடம் அசிஸ்டன்ட் இயக்குனராக வேலை பார்த்து இருக்கிறார். அதிலும் நேருக்கு நேர் மற்றும் இருவர் ஆகிய படங்களில் மணிரத்தினத்துடன் பணியாற்றி இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர் கிட்டத்தட்ட 60 படங்களுக்கும் மேல் தமிழில் நடித்து இருக்கிறார். அதிலும் சில படங்களில் வில்லனாகவும் மிரட்டி இருப்பார்.

இவர் சினிமாவில் பெரிய நடிகராகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். ஆனால் இப்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் இவரை பெரிய அளவில் கொண்டு செல்கிறது என்பது எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு கதாபாத்திரத்தில் ஊறி போய் நடித்து வருகிறார்.

Also read: படத்துல வர காசு சும்மா, சீரியலில் அதிகமா சம்பாதிக்கும் 5 பிரபலங்கள்.. நம்பர் ஒன் இடத்தில் எதிர்நீச்சல் குணசேகரன்

Trending News