
ஒரு பக்கமாய் போய்க்கொண்டிருந்தே எதிர்நீச்சல் சீரியல் இப்பொழுது சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. வீட்டுப் பெண்களை அடக்கி ஆளுமை செய்த மல்லுவேட்டி மைனர்கள் எல்லோருக்கும் தற்போது கடிவாளம் போடப்பட்டுள்ளது. தமிழ்செல்வியின் ஆட்டத்திற்கும் ஆப்பு ரெடியாகி உள்ளது.
அறிவுக்கரசியின் அடியாட்கள் அடக்கு முறையால் தர்ஷன் காதலித்து கைவிட்ட பார்கவி குடும்பம் பதறிப்போனது. ஒரு கட்டத்தில் பெரிய இடத்து பொல்லாப்பு வந்துவிடக்கூடாது என விலகிப் போனார்கள். இருந்தாலும் நியாயம் கிடைக்க போராடி வருகிறார்கள் குணசேகரன் வீட்டுப் பெண்கள்.
இந்த பிரச்சனையில் நியாயம் கிடைக்க வீட்டு பெண்கள் அனைவரும் காவல்துறையின் உயர் அதிகார வர்க்கத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். இப்பொழுது இந்த கேஸ்சை விசாரிக்க மேலிடத்தில் இருந்து நியாயமான ஒரு ரவுடி பெண் போலீசை நியமித்து உள்ளார்கள். இதனால் அட்டகாசமாக நகர ஆரம்பித்துள்ளது எதிர்நீச்சல்.
நேற்றைய எபிசோடில் தர்ஷனுக்கும் போஸ்டர் பரமசிவம் மகளுடன் நடக்க போகும் திருமணத்தை கோலாகலமாக நடத்த திட்டமிட்டு வருகிறார்கள். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்து தர்ஷனை விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்கிறார்.
வழக்கம் போல் துள்ளும் கதிர் இம்முறையும் போலீசை நோக்கி பாய்கிறார். அதற்கு அந்த பெண் இன்ஸ்பெக்டரோ,”துப்பாக்கியை தூக்கி யார் என்று என்னை நினைத்தாய் கரை படாத கைகள் போட்டுத் தள்ளி விடுவேன் என ஆக்ரோஷமாய் எதிர்க்கிறார்” பரோலில் வந்த குணசேகரனை பார்த்து அப்பன் மகன் இரண்டு பேரையும் தூக்கி விடுவேன் என கூறிய காட்சிகள் அனல் பறந்தது.