ஆலமரம் போல் இந்த குடும்பத்தை காப்பாற்றுவேன் என ஒவ்வொரு முறையும் குணசேகரன் சொல்லும் போது தம்பிகள் அவர் பக்கம் சாய்கின்றனர். ஆனால் சக்தியை தவிர ஞானம் மற்றும் கதிர் இருவருக்கும் அந்த சொத்தின் மீது ஒரு கண் இருக்கிறது. இதில் ஞானம் எப்படியாவது தன் பங்கை வாங்கி விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்.
தம்பிகள் தான்என் பிள்ளைகள் என ஒவ்வொரு முறையும் குணசேகரன் சொல்லும் பொழுது மூன்று பேரும் உச்சிக்குளிர்ந்து தோள் கொடுக்கிறார்கள். கூடவே அண்ணனை கைவிட்டு விடாதீர்கள் என விசாலாட்சி கூறும் பொழுது தம்பிகள் அண்ணனுக்கு பலம் கொடுக்கிறார்கள்.
இந்த சொத்துக்கள் எதுவும் எனக்கு வேண்டாம் என சக்தி மட்டும் விலகி நிற்கிறார். ஆனால் குணசேகரன், ஞானம் இருவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு கதிர் வேறு ஒரு வாழ்க்கையை தேடி நகருகிறார். குணசேகரனே திருந்தினால் கூட கதிர் அடுத்த எமனாய் நிற்கும் அளவிற்கு மாறிவிட்டார்.
தன்னுடைய மாமனார் ( நந்தினியின் தகப்பனார் ) உடன் சேர்ந்து கொண்டு குணசேகரனின் கண்ணுக்குத் தெரியாத, தூரமாய் இருக்கும் சொத்துக்களை விற்று வருகிறார். இதற்கு வக்கீல் மற்றும் ஆடிட்டர் இருவரும் உடந்தையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பித்தலாட்டத்தில் மாமனார் தான் அவருக்கு வலது கரமாய் நிற்கிறாய் .
தற்போது ஒரு வாரமாக வீட்டில் கதிரை காணவில்லை. இப்பொழுது தான் குணசேகரனுக்கு பொரித்தட்டுகிறது. ஏற்கனவே கதிரிடம் நன்றாக காசு புழங்குவதால் ஞானம் அவ்வப்போது அவர் மீது சந்தேகப்படுகிறார். இப்பொழுது சொத்துக்கள் விஷயத்தில் கதிர் மீது குணசேகரனுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஞானமும் ஒரு பக்கத்தில் பேராசையில் உள்ளார்.