Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனை எதிர்த்து நாங்கள் ஒவ்வொருவரும் ஜெயித்துக் காட்டுகிறோம் என்று மருமகள்கள் சவால் விட்டிருக்கிறார்கள். இவர்கள் ஜெயிப்பதற்கு நாங்களும் துணையாக இருப்போம் என்று குணசேகரனின் தம்பிகளும் பொண்டாட்டி பக்கம் திரும்பி விட்டார்கள்.
ஆனாலும் ரத்தத்தில் ஊறிப்போன சில குணங்களை மாற்ற முடியாது என்று சொல்லும் அளவிற்கு தம்பிகளுக்கு அவ்வப்போது குணசேகரனின் குணம் வந்து போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் கதிர் எந்த நேரத்தில் எப்படி பேசுவார் என்று கணிக்கவே முடியாத அளவிற்கு அந்நியனாக மாறிக்கொண்டு அனைவரிடமும் கோபத்தை காட்டுகிறார்.
குணசேகரன் விரித்த சூழ்ச்சி வலை
அது மட்டும் இல்லாமல் தரைகுறைவாக பேசி அவர்கள் மனது காயப்படும் அளவிற்கு குணசேகரனின் தம்பி என்பதை நிரூபித்துக் காட்டுகிறார். இவர் எல்லாம் நம்பி நந்தினி எந்த வேலையும் முழுசாக இறங்க முடியாது என்பது நன்றாகவே தெரிந்து விட்டது. அதனாலயே நந்தினிக்கு கதிர் மீது அவ்வப்போது பயம் வந்து கொண்டே இருக்கிறது.
அதன்படி கோவிலில் நடக்கும் காதுகுத்து நிகழ்ச்சிக்கு கதிர் அனைவருக்கும் முன்னாடியே போய் எல்லா ஏற்பாடுகளையும் பார்த்து வருகிறார். ஆனால் போன இடத்தில் பூசாரி சொன்ன சில விஷயங்களால் கதிர் கோபப்படுகிறார். அத்துடன் இதற்கு காரணம் நந்தினி அப்பா சரியாக ஏற்பாடு பண்ணாததால் தான் என்று கதிர் மாமனார் என்று கூட பார்க்காமல் திட்டுகிறார்.
இதனால் கதிர் பழையபடி முருங்க மரத்துக்கு ஏறிடுவார் என்ற பயத்தில் நந்தினி அப்பா கொஞ்சம் கூட யோசிக்காமல் என் மேல் தான் தவறு என்னை மன்னித்து விடுங்கள் என்று மருமகன் காலில் விழ போய்விட்டார். இந்த மாதிரி எதுவும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்றுதான் நந்தினி பயந்து போய் இருக்கிறார். ஆனால் கதிர் அதே மாதிரியே கோபத்துடனே மல்லுவிட்டு மைனராக சுற்றி வருகிறார்.
பிறகு வீட்டில் இருந்து கோவிலுக்கு கிளம்பிய அனைவரும் டிராக்டரில் வருகிறார்கள். இதனை அடுத்து கோயிலுக்கு வந்த நிலையில் மொய் விருந்து பொய் விருந்தாக மாறப்போகிறது. அதாவது குணசேகரன் இல்லாத எந்த பங்க்ஷனுக்கும் நாங்கள் வரமாட்டோம் என்பதற்கு ஏற்ப ஒவ்வொருவரும் நந்தினி அப்பா ஏற்பாடு பண்ண நிகழ்ச்சியை அலட்சியப்படுத்தி விட்டார்கள்.
இதற்கு ஒரு விதத்தில் குணசேகரன் மறைமுகமாக இருந்து அவர்களை தாக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். இப்படி ஒரு பக்கம் கதை இழுத்துக் கொண்டு வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த நாடகத்தை மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஒவ்வொரு ஜோடிக்கும் ரொமான்ஸ் வைத்து நாடகத்தை திசை திருப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் ஞானம் மற்றும் ரேணுகாவின் கெமிஸ்ட்ரி ரொம்பவே சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு ஞானம் ரொமான்ஸில் பீச்சு உதறிவிட்டார். அதே மாதிரி சக்தியிடம் இருந்து இந்த அளவிற்க்கு எதிர்பார்க்கவே இல்லை என்று நினைப்பதற்கு ஏற்ப ஜனனிடம் மொத்தமாக விழுந்து விட்டார். இதனை அடுத்து நந்தினி மற்றும் கதிர் ஏற்பாடு பண்ண நிகழ்ச்சியில் தோற்றுப் போய் குணசேகரன் முன்னாடி அவமானப்பட்டு நிற்கப் போகிறார்கள்.