திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விவாகரத்திற்கு பின்னும் கொடிகட்டி பறக்கும் 3 நடிகைகள்.. அமலாபால் கைவசம் ஒரு டஜன் படங்களா?

சாதாரணமாக நடிகைகளை பொறுத்தவரையில் திருமணம் ஆனாலே அவர்களது மார்க்கெட் சரிந்துவிடும், பட வாய்ப்பு கிடைக்காது என்று தான் பலரும் நினைத்து உள்ளனர். அதற்கு விதிவிலக்காக சிலர் உள்ளனர். தற்போது நயன்தாரா கூட திருமணம் செய்து கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.

திருமணமானாலே இப்படி சொல்லி வரும் சிலர் விவாகரத்து ஆகிவிட்டால் சொல்லவா வேண்டும். அந்த நடிகைக்கு கேரியரே முடிந்து விட்டது என ஓரம் கட்டி விடுவார்கள். ஆனால் திருமணம் ஆனபோது இருந்ததை விட விவாகரத்திற்கு பின்பு 3 பிரபலங்களுக்கு கூரையை பிச்சிகிட்டு கொண்ட அதிர்ஷ்டம் கொட்டுகிறது.

Also Read : சமந்தா முதல் முதலில் வாங்கிய சம்பளம்.. இப்ப கோடியில் வாங்கினாலும், அப்போ இவ்வளவுதான்

சமந்தா : சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். மேலும் சமந்தா விவாகரத்துக்கு பின்பு தான் படு பிஸியாக உள்ளார். அதுவும் புஷ்பா படத்தில் இவர் அடிய ஓ சொல்றியா பாடல் வேற லெவலில் இவரை கொண்டு சென்றது.

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா படமும் நல்ல வரவேற்பை பெற்றது. திருமணத்திற்கு முன் இருந்ததை விட இப்போது தான் சமந்தாவின் மார்க்கெட் எங்கேயோ போய் உள்ளது. மேலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். ஆனால் தனித்தனியாக பிரிந்த வாழ்ந்து வந்தாலும் தற்போது வரை விவாகரத்து பெறவில்லை.

Also Read : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹீரோவுக்கு வலைவீசிய தனுஷ்.. சினிமாவிலும் நீயா நானா போட்டு பார்த்துருலாம்!

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது தான் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறாராம்.

அமலா பால் : இயக்குனர் ஏ.எல். விஜய்யை அமலா பால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில மாதங்களிலேயே இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். மேலும் ஏ எல் விஜய் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அமலாபால் நடிப்பில் கடைசியாக வெளியான காடவர் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கையில் இப்போது ஒரு டஜன் படங்களை அமலாபால் வைத்துள்ளார். அதாவது மலையாளத்தில் 6,7 படங்களும், தமிழ் மொழியில் 4,5 படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

Also Read : முன்பு விதைத்த மோசமான விதை.. ரீ என்ட்ரியால் தியேட்டரில் இருந்து துரத்தப்பட்ட அமலா பால்

Trending News