ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

38 வயதாகியும் அஞ்சலிக்கு நடக்காத திருமணம்.. அந்த 4 நடிகர்களால் நொந்து போன மணிமேகலை

Anjali’s marriage did not happen: அஞ்சலி நடிக்கும் கதாபாத்திரங்கள் துணிச்சலுடனும், வித்தியாசமான கேரக்டரை காட்டி தனித்துவமாக நடிக்க கூடியவர். படத்தில் மட்டுமே இல்ல நிஜத்திலும் நான் இப்படிதான் என்கிற மாதிரி பல விஷயங்களை செம போல்டாக செய்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

ஆனாலும் தற்போது வரை முன்னணி நடிகையாக வருவதற்கு போராடிக் கொண்டுதான் வருகிறார். அதற்கு காரணம் அஞ்சலி நடித்த படங்கள் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், போகப்போக பேருக்கும் புகழுக்கும் சம்பாதிக்கும் வகையில் மாறிவிட்டது. அதனால்யே நடிகர்களுடன் மிக நெருக்கமாக நடிக்க ஆரம்பித்தார். அத்துடன் சில நடிகருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்ததால் இவருடைய பெயர் டேமேஜ் ஆகிவிட்டது.

அதனால் தான் தற்போது 38 வயது ஆகியும் திருமணம் நடக்காமல் இருக்கிறார். அதற்கு காரணமானவர் ஜெய். இவர்கள் இணைந்து நடித்த எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அதன் மூலம் கொஞ்சம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்ததும் கல்யாணம் ஆகாமலேயே ஒன்றாக வாழ ஆரம்பித்தார்கள்.

Also read: நடுரோட்டில் அவரோட படுக்க சொன்னாங்க.. பகீர் கிளப்பிய அங்காடித் தெரு அஞ்சலி

இந்த விஷயம் வெளியே தெரிந்ததும் இவர்களுடைய பெயர் ரொம்பவே கிசுகிசுக்கப்பட்டது. அத்துடன் ஜெய் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு மதுப்பழக்கத்திற்கு அதிகம் அடிட் ஆனதால் இவருடன் இருந்தால் தன்னுடைய கேரியரும் வீணாகிவிடும் என்று அஞ்சலி அப்படியே நைசா கழண்டு வந்து விட்டார். அதன் பின் விமல், சசிகுமார் மற்றும் விஜய் சேதுபதியுடன் நடித்த படங்கள் மூலம் அஞ்சலி இவர்களுடனும் காதல் வலையில் சிக்கி விட்டார் என்று கிசுகிசுக்க ஆரம்பித்தது.

இப்படி அஞ்சலி பற்றிய விஷயங்கள் தொடர்ந்து அதிகமாக வெளிவர ஆரம்பித்ததால் தற்போது வரை அஞ்சலியை யாருமே கல்யாணம் பண்ண முன்வரவில்லை. இந்த நான்கு நடிகர்களால் தன்னுடைய வாழ்க்கையை வீணாகி விட்டது என்று தற்போது நொந்து போய் இருக்கிறார். அதனால் தான் சமிப காலமாக தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

தற்போதைக்கு கமிட்டான படங்கள் எல்லாத்தையும் நடித்து முடித்துவிட்டு திருமணத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். ஏனென்றால் இவர் ஏற்கனவே கூறிய ஒரு பேட்டியில் கேரியர் எவ்வளவு தூரம் எனக்கு முக்கியமோ, அதே மாதிரி என்னுடைய குடும்ப வாழ்க்கையும் எனக்கு ரொம்பவே அத்தியாவசியம் என்று சொல்லி இருக்கிறார். அதனால் கூடிய விரைவில் அஞ்சலி திருமண பந்தத்தில் இணைய போகிறார். ஆனால் யார் தான் இவரிடம் சிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

Also read: 37 வயதில் அஞ்சலியின் மொத்த சொத்து மதிப்பு.. அந்த ஒரு விஷயத்திற்கு மட்டும் பல லட்சம் செலவு செய்வாராம்

Trending News