வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

72 வயதிலும் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைக்கும் முத்துவேல் பாண்டியனின் 5 சாதனைகள்.. ரிலீஸ்க்குள்ள ஹார்ட் அட்டாக் வந்துரும் போல

Rajini in Jailer: அட்டகாசமாக நாளை திரையரங்குகளில் வெளிவர இருக்கும் ஜெயிலர் திரைப்படம். பலபேர் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் அதிரிபுதிரியாக ஒவ்வொரு நிமிடமும் கடந்து கொண்டிருக்கிறது. நாளை இப்படத்தை பார்ப்பதற்காக ஏற்கனவே அட்வான்ஸ் புக்கிங்கில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து இப்படம் ரிலீஸ்க்கு முன்பே 5 சாதனைகளை படைத்திருக்கிறது. அதாவது முதல் முறையாக தமிழ்நாட்டின் 1000 திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியாகும் திரைப்படம் இப்படம் தான். அந்த அளவிற்கு அனைத்து தியேட்டர்களிலும் ஏகபோக வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

Also read: இலவச டிக்கெட், விடுமுறை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 10.. புது ட்ரெண்டை உருவாக்கி பவரை காட்டிய ஜெயிலர்

அடுத்ததாக கர்நாடகாவில் மிகப் பிரம்மாண்டமான சூப்பர் ஹிட் ஆன படமான கேஜிஎப் 2 படத்தையும் தாண்டி, ஜெயிலர் படத்திற்கு 1100 காட்சிகளை பார்ப்பதற்கு வெளியிட்டு அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்த்த ஒரே தமிழ் திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் ஜெயிலர் படம் தான்.

இதனைத் தொடர்ந்து புக் மை ஷோவில் பலரும் ஆன்லைன் மூலமாக டிக்கெட்களை பதிவு செய்வார்கள். அந்த வகையில் இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத சாதனையாக புக் மை ஷோவில் 650 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்று சாதனை புரிந்த தமிழ் திரைப்படம்.

Also read: இந்த ஆண்டு யாருமே பண்ணாத வசூலை வாரி குவிக்கும் ரஜினி.. அஜித், விஜய், ps2 படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்

மேலும் பங்களாதேஷ் மற்றும் டாக்காவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஜெயிலர். அடுத்தபடியாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் டிக்கெட்கள் விற்க ஆரம்பிக்கப்பட்ட சில மணி நேரத்திலே அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்ட ஒரே படம் இதுதான். இப்படி படம் ரிலீசுக்கு முன் ஒவ்வொரு விஷயங்களையும் கேட்கும் போது அப்படி ஹார்ட் அட்டாக்கை வந்துடும் போல அந்த அளவிற்கு ஆர்ப்பாட்டமாக இருக்கிறது.

முக்கியமாக 72 வயதிலும் கதாநாயகனாக நடித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து பல சாதனைகளை செய்து வரும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான். கண்டிப்பாக நாளைக்கு தீபாவளி போல் அனைத்து ரசிகர்களும் இப்படத்தை ஆரவாரமாக கொண்டாடப் போகிறார்கள்.

Also read: விஜய், கமலை காலி செய்ய போகும் 4 நாள் வசூல்.. வெறியோடு களத்தில் குதித்த ஜெயிலர்

Trending News