புதன்கிழமை, ஜனவரி 22, 2025

லோகேஷ் வந்து கூப்பிட்டாலும், அது இல்லன்னா நடிக்க மாட்டேன்.. 9 வருடத்திற்கு பிறகு ரீ என்ட்ரிக்கு தயாரான சாக்லேட் பாய்

Director Lokesh: தன் இயக்கத்தில் மேற்கொள்ளும் அனைத்து படங்களும் வெற்றியை கண்டு, தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் இவர் கூப்பிட்டாலும் அந்த ஒரு விஷயம் இல்லாமல் நடிக்க வரமாட்டேன் என கெத்து காட்டிய சாக்லேட் பாய் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

90 காலகட்டத்தில், ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் முன்னணி கதாநாயகனாய் நடித்து வந்தவர் தான் அப்பாஸ். காதல் தேசம், விஐபி, படையப்பா போன்ற படங்களில் தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டிய இவர் வில்லன் கதாபாத்திரம் ஏற்றும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சந்தானத்தை ஓரங்கட்ட பார்த்த கவுண்டமணி.. சிம்பு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

அவ்வாறு தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என அழைக்கப்பட்டார். அதன்பின் இவர் ஏற்ற கதாபாத்திரம் சரிவர கை கொடுக்காத நிலையில் சினிமாவில் இடைவெளி விட்டு காணப்பட்டார். அதைத்தொடர்ந்து வெளிநாட்டில் செட்டிலான இவர் தற்பொழுது 9 வருடத்திற்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்க தயாராக உள்ளதாக இன்டர்வியூ ஒன்றில் கூறினார்.

சினிமாவில் இடைவெளி விட்ட காரணம் என்ன, என்ற கேள்விக்கு தோல்வி என்பது சகஜம் அதை விட்டுவிட்டு இனி எடுக்க போகும் புது முயற்சிகளில் பக்கா பிளான் போட போவதாகவும் கூறினார். தனக்கான திறமை சினிமாவில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்ததாக கூறினார்.

Also Read: தளபதி பட வாய்ப்பை தவறவிட்ட ஹாண்ட்சம் ஆக்டர்.. தளபதி படத்தில் மணிரத்தினம் முதலில் செலக்ட் செய்த கலெக்டர்

மேலும் இனி நான் தேர்ந்தெடுக்கும் படங்களில், ஸ்கிரிப்ட் தான் முக்கியம் அதன் பின் இயக்குனர், தயாரிப்பாளர் இதை மூன்றுமே நான் சரிவர பார்த்து விட்டு தான் படத்தில் இறங்குவேன் என்று தான் சினிமாவில் அடிபட்ட அனுபவத்தை முன் வைத்தார்.

மேலும் படத்தில் ஹீரோ கதாபாத்திரம் இல்லை என்றாலும் தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதை ஏற்க போவதாக தன் எண்ணத்தை தெளிவு படுத்தினார். இவரின் இத்தகைய பிளான் ஏந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: திகட்ட திகட்ட கணவரை காதலித்த ஸ்ருதி.. மனதை கனக்க வைத்த கடைசி விளம்பர வீடியோ!

Trending News