படம் ஓடாவிட்டாலும் பந்தாவா காலரை தூக்கிவிட்டு திரியும் சூர்யா.. விட்ட மார்க்கெட்டை தொக்கா தூக்குமா கங்குவா.?

Suriya: தன்னுடைய படம் வெற்றியோ தோல்வியோ தன்னை ரசிகர்கள் முன்னாடி ஜெயித்த மாதிரி காட்டிக் கொள்ள வேண்டும் என்று பல சூட்சமங்களை செய்து வரக்கூடியவர்தான் நடிகர் சூர்யா. ஏனென்றால் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேல் ஆகியும் இப்பொழுது வரை ஒரு ஹிட் படத்தை கொடுக்கவில்லை. அந்த வகையில் கடைசியாக 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஏழாம் அறிவு படம் தான் ஹிட் அடித்து இருக்கிறது.

அதற்கும் ஒரு காரணம் அந்த நேரத்தில் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் இருந்ததால் ஈசியாக ஏழாம் அறிவு படம் 100 கோடி வசூலை பெற்றுவிட்டது. இதே மாதிரி தான் கஜினி படமும் வெற்றி அடைந்ததற்கு அந்த நேரத்தில் பெரிய நடிகர்களான கமல் மற்றும் ரஜினி படங்கள் எதுவும் வராததால் ஈசியாக 50 கோடி வசூலை பெற்று விட்டார்.
இதனை தொடர்ந்து வந்த படங்கள் எதுவும் பெருசாக வெற்றி அடையவில்லை என்றே சொல்லலாம்.

ஒத்த படத்தின் மூலம் மொத்த நம்பிக்கை வைத்திருக்கும் சூர்யா

ஆனால் ஏதாவது படத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வந்தார். அந்த வகையில் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஒரு ஃபெயிலியர் படமாக முத்திரை பெற்று விட்டது. இதற்கு இடையில் வெளிவந்த சூரரை போற்று மற்றும் ஜெய்பீம் படங்களும் தியேட்டர் ரிலீஸ் இல்லாமல் ஓடிடி மூலம் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் அவர்களே ஒரு ரேட்டிங் கொடுத்து படம் அதிக வசூலை பெற்றுவிட்டது என்று காண்பித்து விட்டார்கள். ஆனால் தியேட்டர் ரிலீஸ் ஆகி வசூலை பெறாததால் இந்த இரண்டு படங்களுமே வசூல் அளவில் வெற்றி என்று கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. இப்படியே போனால் தன்னுடைய மார்க்கெட் போய்விடும் என்ற நிலையில் இருந்த பொழுது தான் கிடைத்த ஒரு ஆப்பர் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டர்.

தப்பு தண்டா பண்ற மாதிரி கெட்ட விஷயங்களை சினிமாவில் நடிக்க மாட்டோம் என்று கட்டுக்கோப்பாக இருந்த சூர்யா ரோலக்ஸ் கேரக்டரை எடுத்து நடித்ததற்கு முக்கிய காரணம் ரோலக்ஸ் கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என்பதினால் தான். அதே மாதிரி எதிர்பார்த்த அளவிற்கு ரோலக்ஸ் கேரக்டர் பரபரப்பாக அனைவரும் பேசும்படி அமைந்தது. ஆனால் இவர் ஹீரோவாக நடித்த படம் என்று மூன்று வருடங்கள் ஆகியும் வேறு எந்த படங்களும் வரவில்லை.

அந்த வகையில் படம் ஓடவில்லை என்றாலும் நான் கெத்து தான் என்று காலரை தூக்கிக்கொண்டு நாளா பக்கமும் சுற்றி வருகிறார். தற்போது ஒத்த படத்தை நம்பி மலை போல் காத்துக் கொண்டிருக்கும் படம் தான் கங்குவா. இப்படத்தின் மூலம் விட்ட மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இப்படத்தில் ஆரம்பத்தில் போடப்பட்ட பட்ஜெட் 300 கோடி. ஆனால் போக போக பட்ஜெட்டை தாண்டி 350 கோடி வரை இழுத்துவிட்டது.

மேலும் இதுவரை சூர்யா நடிப்பில் இல்லாத பிரம்மாண்ட பட்ஜெட் என்பதினாலும் வித்தியாசமான கேரக்டர் என்பதினாலும் படம் ரிலீசுக்கு முன்னே 500 கோடிக்கு சேட்டிலைட் உரிமையை விற்பனை செய்து விட்டார்கள். அந்த வகையில் எப்படியும் கங்குவா படம் ரிலீஸ் ஆகி ஆயிரம் கோடி வசூலை அடைந்து விடும் என்ற நம்பிக்கையில் வருகிற தீபாவளி அன்று ரிலீஸ் பண்ணலாம் என்ற முடிவில் இருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் சூர்யா விட்ட மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவேன் என்ற நம்பிக்கையில் முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறார்.

அடுத்த படத்திற்கு அஸ்திவாரம் போட்ட சூர்யா

Next Story

- Advertisement -