திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இப்பதாங்க இவரு டம்மி.. யாராலயும் யோசிக்க முடியாத ஏ.ஆர்.முருகதாஸின் 5 ஹிட் படங்கள்

சினிமாவில் பல முன்னணி ஹீரோகளுக்கு சூப்பர் ஹிட் படத்தை இயக்கி கொடுத்தவர் தான் ஏ ஆர் முருகதாஸ். அப்படிப்பட்ட இவரை இப்பொழுது யாரும் கண்டு கொள்ளவில்லை என்றே சொல்லலாம். ஆனால் இவர் இயக்கிய படங்கள் இப்பவும் யாராலும் எடுக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஹிட் கொடுத்திருக்கிறார். அது என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.

ரமணா: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு ரமணா திரைப்படம் வெளிவந்தது இதில் விஜயகாந்த், சிம்ரன், ஆஷிமா பல்லா, விஜயன் மற்றும் ரியாஸ்கான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடக்கக்கூடிய ஊழல்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு முடிவு செய்யக்கூடிய படமாக அமைந்திருக்கும். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட் படமாக ஆனது.

Also read: முதல் பட வெற்றியோட காணாமல் போன 6 இயக்குனர்கள்.. பேஸ்மெண்ட் ஸ்ட்ராங் பில்டிங் வீக்கான லிங்குசாமி

கஜினி: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு கஜினி திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, அசின், நயன்தாரா, பிரதீப் ராவத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அம்னீஷியாவால் பாதிக்கப்பட்ட ஒரு தொழிலதிபர் அவரது காதலியின் கொலைக்கு பழிவாங்கும் முயற்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது

துப்பாக்கி: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு துப்பாக்கி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் இந்திய ராணுவத்தில் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஸ்லீப்பர் செல்லை கண்டுபிடித்து அழிக்கவும், செயலிழக்கச் செய்யும் முயற்சியாக இக்கதை அமைந்திருக்கும். இப்படம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Also read: பறிபோன பட வாய்ப்பால் உச்சகட்ட கோபத்தில் ஏ ஆர் முருகதாஸ்.. கண்டுகொள்ளாத தளபதி!

தீனா: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு தீனா திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாக வெளிவந்தது. இந்த படத்தின் மூலம் தான் ஏ.ஆர் முருகதாஸ் இயக்குனராக அறிமுகமானார். அறிமுகமான இந்த படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அத்துடன் அஜித்திற்கும் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது.

கத்தி: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு கத்தி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சமந்தா, சதீஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். இப்படம் விவசாயின் வளர்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் பல்வேறு பாராட்டுகளை பெற்று பல விருதுகளையும் வாங்கிய ஒரு சிறந்த திரைப்படமாக ஆனது.

Also read: இவங்க 10 பேர் ஜென்மத்திற்கும் சேர்ந்து நடிக்க வாய்ப்பே இல்லை.. எலியும் பூனையுமாக இருக்கும் நடிகர்கள்

Trending News