வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாக்யாவை குத்தி கிழிக்கும் பிள்ளைகள்.. சூடுபிடிக்கும் சக்களத்தி சண்டை, குளிர்காயும் கோபி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்குப் பிறகு கோபியுடன் சேர்ந்து வாழ முடியாது என அவரை வீட்டை விட்டு வெளியேற்றிய பாக்யாவை குற்றவாளி போல் வீட்டில் இருப்பவர்கள் நடத்துகின்றனர். குறிப்பாக செழியன் மற்றும் இனியா இருவரும் அப்பா வீட்டை விட்டு வெளியே போனதற்கு அம்மாதான் காரணம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு வார்த்தைகளால் அவரை குத்திக் கிழிக்கின்றனர்.

கோபி செய்தது மிகப்பெரிய தவறு என்றாலும் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கக்கூடாது என செழியன் நினைக்கிறார். இதனால் பாக்யா சமைத்த உணவை சாப்பிட விரும்பாத செழியன், வீட்டில் இருப்பவர்களின் முன்பு பாக்யா தியாகி ரேஞ்சுக்கு நாடகமாடுகிறார் என கண்டபடி பேசுகிறார்.

Also Read: விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடியில் இருந்து விலகலா?

மேலும் பள்ளிக்கு செல்லும் இனியா தனக்கு தலையை வாரி விடும்படி அண்ணி ஜெனியிடம் கேட்கிறார். அதை பாக்யா செய்ய முன் வந்தாலும் அவரை எடுத்தெறிந்து பேசுகிறார். குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் மாறி மாறி பாக்யாவை திட்டுவதால் அவர் மனம் உடைந்திருக்கிறார்.

இருப்பினும் எழில் மற்றும் மாமனார், ஜெனி உள்ளிட்டோர் பாக்யாவிற்கு பக்கபலமாக இருக்கின்றனர். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த பாக்யாவின் குடும்பத்தை உருக்குலைத்த ராதிகாவை நாக்கைப் பிடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்கவேண்டும் என ராதிகா வீட்டிற்கு கோபியின் அம்மா ஈஸ்வரி செல்கிறார்.

Also Read: நீங்க சீரியல் நடிகை என ஒதுக்கப்பட்ட 5 ஹீரோயின்!

அங்குதான் கோபி இருக்கிறார் என ஒவ்வொரு அறையாக திறந்து பார்க்கிறார். இப்படி கேவலமான வேலைகளைச் செய்யாதீர்கள் என ராதிகாவின் அம்மா, ஈஸ்வரியை திட்டினாலும் ‘என்னுடைய மகன் இங்கே இல்லாவிட்டாலும் அவனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாயே ராதிகா’ என்று வாய்க்கு வந்தபடி ராதிகாவை அசிங்கப்படுத்துகிறார்.

இப்படி ஒவ்வொரு நாளும் பாக்யா குடும்பத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து வந்து ராதிகாவை அவமானப்படுத்துவதால், அதுவே கோபியை மன்னித்து ராதிகா ஏற்றுக்கொள்வதற்கு ஒரு காரணமாக மாறிவிடுகிறது. இவ்வாறு குடும்பமே சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது கோபி மட்டும், தான் நினைத்ததெல்லாம் நடக்கபோகிறது என்று அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்.

இதன்பிறகு கோபியை தன்னுடைய வீட்டிலேயே ராதிகா தங்க அனுமதிக்கிறார். அவரை விரைவில் இரண்டாவது திருமணமும் செய்து கொண்டு, இந்த சீரியலில் வில்லியாக இனி தனது ஆட்டத்தை ஆட போகிறார்.

Also Read: கோபி விட கேவலமாக நடந்து கொள்ளும் மகன்

Trending News