புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

என் லெவலுக்கு விஜய் ஆண்டனி கூட எல்லாம் நடிக்க முடியாது.. கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய ஹீரோயின்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக உருவாகி தனக்கென தனி பாணியில் பயணிப்பவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிக்கும் படங்களில் கோடி கோடியாய் செலவழித்து ப்ரோமோஷன் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. டைட்டிலை மட்டுமே வைத்து ப்ரோமோஷன் செய்து விடலாம், அந்த அளவுக்கு இவரது பட டைட்டில்கள் எதிர்மறை பெயர்களை கொண்டே இருக்கும்.

உதாரணமாக பிச்சைக்காரன், சைத்தான், எமன் என முழுக்க, முழுக்க நெகட்டிவான டைட்டிலை கொண்டு ரசிகர்களை தன் பக்கம் இழுப்பார் விஜய் ஆண்டனி. இதனிடையே அண்மையில் இவர் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டான பிரபல நடிகை ஒருவர், கால்ஷீட் கொடுத்துவிட்டு நடிக்க வராமல் இருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

Also Read: தளபதிக்கு சவுக்கடி கொடுத்த விஜய் ஆண்டனி.. உசுப்பேத்தி வேடிக்கை பாக்குறீங்களா என ஆதங்கம்

பொதுவாகவே இவரது படங்களில் நடிக்கும் நடிகைகள் புதுமுக நாயகிகளாகவே பெரும்பாலும் அவருடன் இணைந்து நடிப்பார்கள். ஆனால் அந்த நடிகைகள் பலரும் தொடர்ந்து மார்க்கெட்டை பிடிக்க மாட்டார்கள். மேலும் சில நடிகைகள் இவருடன் நடித்தது தான் முதலும், கடைசியுமாக சினிமாவை விட்டே காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில், அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றது.

இதன் காரணமாக இவரது மார்க்கெட் தமிழில் சற்று இறங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும், இப்படத்தை தொடர்ந்து தற்போது ஹிட்லர் என்ற படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இதுவரை இப்படத்திற்கான எந்த ஒரு அப்டேட்டும் வராத நிலையிலும், சத்தமே இல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Also Read: ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் விஜய் ஆண்டனி.. அக்கட தேசத்தை நம்பி 100 கோடி பட்ஜெட்டில் தோல்வி படம்

இதனிடையே இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை ஆத்மிகா, என் லெவெலுக்கு விஜய் ஆண்டனியுடன் நடிக்க முடியாது என சட்டம் பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்கு கொடுக்கப்பட்ட அதே தேதி கால்ஷீட்டில் வேறு படத்தின் வாய்ப்பு வந்ததால், அந்த படத்தில் நடிக்க கிளம்பியுள்ளார்.

இதனால் விஜய் ஆண்டனி உட்பட ஹிட்லர் படக்குழு சற்று அப்செட்டில் உள்ளனர். ஏற்கனவே நடிகை ஆத்மிகா விஜய் ஆண்டனியுடன் இணைந்து கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் பெருந்தோல்வியடைந்ததால் அவரது மார்க்கெட் சற்று இறங்கியது. இதை மனதில் வைத்து அவர் இவ்வாறு செய்யும் நிலையில், பிறகு எதற்காக மீண்டும் விஜய் ஆண்டனி படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியும் அவர் முன் வைக்கப்படுகிறது.

Also Read: நல்ல படங்கள் நடித்தும் ராசி இல்லாமல் தோற்றுப் போன 5 நடிகர்கள்.. வேகம் இருக்கிற அளவுக்கு விவேகம் இல்லாத விஜய் ஆண்டனி

Trending News