Tamil Cinema Teachers: ஸ்கூல் படிக்கும்போது இருந்து பொதுவாகவே டீச்சர் என்றால் மாணவர்களுக்கு பயம்தான். ஆனால் அந்த எண்ணத்தை தவுடு பொடியாக்கும் அளவிற்கு தமிழ் சினிமாவில் டீச்சராக நடித்து, 80களில் இருந்து தற்போது உள்ள 2கே கிட்ஸ் வரை பேமஸ் ஆக சிலர் மட்டுமே ஞாபகத்தில் வருவார்கள். அப்படி மவுஸ் குறையாமல் டீச்சராக இருக்கும் ஐந்து ஹீரோயின்ஸ் பற்றி பார்க்கலாம்.
16 வயதினிலே ஸ்ரீதேவி: 1977-இல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே திரைப்படத்தில் ஸ்ரீதேவி மயிலாக நடித்திருப்பார். கிராமப்புறத்தில் வாழும் பெண் பத்தாம் வகுப்பு பாஸ் ஆனதுக்கு, பிறகு டீச்சர் ஆக வேண்டும் என ஒரு கனவோடு இருப்பாள். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதது போல், அந்த கனவு நிறைவேறாமல் போய்விடும். இவரின் ஆக்டிங் கேரியரிலே இது ஒரு மைல்கல் ஆக அமைந்த படமாகும்.
Also Read:ரட்சிதாவின் சிபாரிசால் பிக் பாஸ்க்கு போகும் சீரியல் நடிகர்.. சாக்லேட் பாயை தூக்கிய விஜய் டிவி
கடலோர கவிதைகள்: பாரதிராஜா இயக்கத்தில் 1986 இல் வெளிவந்த கடலோர கவிதைகள் திரைப்படத்தில் ஜெனிபர் டீச்சராக ரேகா நடித்தார். திரைப்படத்தில் காட்டன் புடவை கட்டிக்கொண்டு அழகாக இருப்பார். ரவுடியாக திரியும் சத்யராஜை திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவார். மனதில் நிற்கும் அளவுக்கு நடிப்பினால் காதல், தியாகம், சமுதாயப் பிரச்சினை போன்றவற்றை இந்த படம் வெளிச்சம்போட்டு காட்டி இருக்கும்.
நாட்டாமை ராணி: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 இல் வெளிவந்தது நாட்டாமை. இப்படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடித்திருந்தனர்.ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு கவர்ச்சியாக சேலை உடுத்தி கிளாமரான டீச்சராக படம் முழுக்க வலம் வருவார் ராணி . இந்த படத்தில் திருப்புமுனையான கதாபாத்திரமாக ராணியின் கதாபாத்திரம் அமைந்திருந்தது.
மலர் டீச்சர்: 2015இல் வெளிவந்த பிரேமம் தெலுங்கு திரைப்படதின் ரீமேக் ஆகும். 2015இல் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான படம் தான் பிரேமம். 80 கிட்ஸ்க்கு ஒரு ஜெனிஃபர் டீச்சர், 90ஸ் கிட்ஸ்க்கு நாட்டாமை டீச்சர் போல 2K கிட்ஸ்க்கு மலர் டீச்சர். காட்டன் புடவை, லூஸ் ஹேர், மேக்கப் இல்லாத முகம் என சாய்பல்லவி இந்த படத்தில் கிறங்கடித்து இருப்பார்.
ராட்சசி: கௌதம் ராஜ் இயக்கத்தில் 2019-ல் வெளிவந்த திரைப்படம் ராட்சசி. இதில் ஜோதிகா கீதாராணி என்னும் கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹெட் மாஸ்டர் ஆக நடித்திருப்பார். அதில் அவர் தனியாக சந்திக்கும் சவால்கள், கல்வி முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும், தனித்து துணிச்சலான நடிப்பினால் மிரட்டி விட்டு இருப்பார். என்னதான் கீதாராணி ஸ்ட்ரிக்ட் டீச்சராக மிரட்டி இருந்தாலும், 90ஸ் கிசுக்களுக்கு கணக்கு ஜோதிகா எப்போதுமே காக்க காக்க மாயா டீச்சர் ஆக தான் கண்ணுக்கு தெரிந்தார்.
Also Read: மேடையில் தொகுப்பாளினிடம் அத்துமீறி கேவலமான வேலை செய்த கூல் சுரேஷ்.. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி