புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஆணி வேருக்கு ஆட்டம் கழன்றுச்சு.. பாண்டியன் ஸ்டோர்ஸில் வாரம் வாரம் புது பிரச்சினை தான்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதையே இல்லாமல் உருட்டுறதே இவங்களுடைய வேலையா போச்சு. முதலில் அண்ணன் தம்பிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி அதை வைத்து கொஞ்ச நாளாகவே ஓட்டி வந்தாங்க. அதன் பிறகு அவங்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சமாளிக்கும் விதமாக அமைந்தது .

அடுத்ததாக கண்ணன் மற்றும் முல்லைக்கு பிரச்சினை இருக்கிற மாதிரி வைத்து அது ஒரு வழியாக முடிந்து விட்டது. இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் தனத்துக்கு ஆட்டம் கழண்டு விடுற மாதிரி கதை நகர்கிறது. அதாவது தனத்துக்கு அடிக்கடி நெஞ்சுவலி வருது. ஆனா அதை பற்றி யார்கிட்டயுமே சொல்லல.

Also read: குணசேகரன் உருவானது எப்படி.? எதிர்நீச்சல் ஷாக்கிங் சீக்ரெட்டை உடைத்த திருச்செல்வம்

அதாவது தனத்துக்கு பிரஸ்ட் கேன்சர் இருக்கு என்று ரிப்போர்ட்டை பார்த்து மருத்துவர்கள் சொல்லிவிடுகிறார்கள். இதில் தனத்துக்கு ஆறுதலாக இருப்பது மீனா தான். இப்பொழுது இவர்கள் இருவருக்குமே தெரிந்த இந்த உண்மை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி இருக்கலாம்.

ஆனால் இந்த தனம் அதையும் செய்ய மாட்டார். சரி மீனா மூலமாகவாது உண்மை அனைவருக்கும் தெரியும் என்று எதிர்பார்த்தால் அவரிடமும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கி விடுகிறார். கண்டிப்பாக இதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆப்ரேஷன் பண்ண வேண்டும் என்ற அளவுக்கு போகப்போகிறது.

Also read: தாலி சென்டிமென்ட் வைத்து உருட்டும் விஜய் டிவி.. புரட்சி செய்யும் எதிர்நீச்சல்

ஆனால் இப்பொழுது தனம் கர்ப்பமாக இருக்கிறார். இப்படி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது ஆபரேஷன் பண்ண முடியாது. ஒருவேளை குழந்தை பிறக்கும் நேரத்தில் தான் டாக்டர் மூலம் மூர்த்திக்கும் மற்றவர்களுக்கும் தெரியப்போகிறதா?

ஆக மொத்தத்துல நமக்கு இருக்க பிரச்சனையே மறப்பதற்கு தான் டிவியை பார்க்கிறோம். அப்படி பார்க்கும் பொழுது இந்த நாடகத்தை பார்த்தால் நம்மளுக்கு மண்டையை பிச்சிக்கிட்டு போலாம் போல இருக்கு. சீக்கிரத்தில் எதையாவது பண்ணி நாடகத்தை முடித்து விடுங்க.

Also read: அஜித்தால் தான் தன்னுடைய கேரியரே போச்சு.. பரபரப்பாக பேட்டியளித்த எதிர்நீச்சல் பிரபலம்

Trending News