நடிகர் அஜித் 1992 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி ராஜ்யத்தையே கட்டி வைத்துள்ளார். நடிக்க வந்த 20 ஆண்டுகளில் அஜித் பார்க்காத அவமானங்களே இல்லை எனலாம். ஆரம்பத்தில் எத்தனையோ இயக்குனர்கள் அஜித்தை வைத்து படம் இயக்க பயந்தார்கள், பல நடிகைகள் அஜித்துடன் நடித்தால் தங்களது மார்க்கெட் குறைந்து விடும் என எண்ணியுள்ளனர்.
அந்த அளவிற்கு அஜித்தின் மார்க்கெட் சரிந்த போது, அவர் பல இன்னல்களை சந்தித்தார். ஆனால் இவை எதுக்குமே அஜித் சோர்வடையவில்லை, அதன் விளைவாக அஜித்தின் பல படங்கள் மாஸாக, ஆக்ஷனாக வில்லத்தனமாக தனக்கென தனி ஸ்டைலில் அஜித் தன் நடிப்பு திறமையை மேம்படுத்தினார். இதற்கு பலனாக இந்திய சினிமாவின் தல என எல்லோரும் ஆர்ப்பரிக்கும் நடிகராக உச்சத்தில் உள்ளார்.
Also Read: அஜித்துடன் இணைந்த விஜய் பட வில்லன்.. அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே62
நடிகர் அஜித்திற்கு நடிப்பையும் தாண்டி பைக், கார் உள்ளிட்ட ரேஸ்களில் கலந்துக்கொண்டு கோப்பைகளை வாங்குவதிலும் கில்லி எனலாம். அதேபோல் அஜித் அண்மைக்காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார். மேலும் தன்னால் முடிந்த உதவிகளையும், பிறருக்கு மறைமுகமாக செய்து வருகிறார். இப்படி அஜித்தின் பல முகங்கள் நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்,
ஆனால் யாருக்கும் தெரியாத அஜித்தின் மறுபக்கத்தை இயக்குனர் ஹெச்.வினோத் அண்மையில் துணிவு பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். அஜித் எப்போதுமே தனது கணக்கு வழக்குகளை சரியாக பார்ப்பதில் கில்லாடியாம். வீட்டு கணக்குகளிலிருந்து, தான் சம்பாதிக்கும் கணக்குகள் வரை அஜித் தான் தற்போது வரை பார்த்துக்கொள்கிறாராம்.
Also Read: அஜித்தின் இயக்குனர் என்பதை நிரூபித்த வினோத்.. ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ்
மேலும் அஜித் பலரிடம் இந்த மூன்று அட்வைஸையும் கூறுவாராம். அதாவது நாம் சம்பாதிக்கும் பணத்தை மூன்றாக பிரித்து கொள்ள வேண்டும், ஒரு பணத்தை மக்களுக்காகவும், அரசாங்கத்திற்காகவும் வரி செலுத்துவதற்காக மட்டுமே வைத்துக்கொண்டு அதை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாதாம். இரண்டாவது, நாம் சம்பாதிக்கும் 10 சதவிகித பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுப்பதற்காகவே எடுத்து வைக்க வேண்டுமாம்.
மூன்றாவதாக இந்த இரண்டிற்கும் மிச்சம் போகவுள்ள பணத்தை நாம் செலவு செய்து வாழ வேண்டும் என அஜித் கூறுவதாக ஹெச்.வினோத் பூரிப்புடன் தெரிவித்தார். அந்த அளவிற்கு நாம் சம்பாதிக்கும் பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை அஜித்திடம் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். அஜித்தின் இந்த நற்குணம் தற்போதுள்ள காலகட்டத்தில் வாழும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: ஒரே இயக்குனருடன் அடுத்தடுத்து கூட்டணி போடும் அஜித்.. உண்மையை போட்டு உடைத்த வினோத்