வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோ 100% என் படம்னு சொன்னதெல்லாம் பொய்யா.. செய்வதறியாமல் புலம்பும் லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய்யுடன் கூட்டணி போட்டு லியோ படத்தை இயக்கி வருகிறார். அண்மையில் லியோ படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் படம் என்று சொல்லும் அளவிற்கு அந்தப் புரோமோ வீடியோ இருந்தது.

ஆனால் தற்போது லியோ படத்தில் சில குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது எப்போதுமே லோகேஷ் தனது படத்தில் அவருக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். அந்த வகையில் உலகநாயகன் கமலஹாசன் எப்போதும் தன்னுடைய படத்தில் இயக்குனர்களிடம் திரைக்கதையில் சில மாற்றம் சொல்லுவார்.

Also Read : உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா.? விஜய், தில்ராஜை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை, K.ராஜன்

ஆனால் விக்ரம் படம் முழுக்க முழுக்க லோகேஷ் கற்பனையில் தான் உருவானது. இதில் எந்த ஒரு விஷயத்திலும் கமல் தலையிடவில்லையாம். ஆகையால் தான் விக்ரம் படம் மாபெரும் வெற்றி அடைந்ததாக சில பிரபலங்கள் கூறி வந்தனர். ஆனால் அந்த சுதந்திரம் லியோ படத்தில் கிடைக்காமல் போய்விட்டது.

அதாவது லோகேஷ் தனது படங்களில் யார் தேவையானவர்களோ அவர்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்வார். இப்போது லியோ படத்தில் விஜய் தனக்கு பிடித்த ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவை சேர்த்துள்ளாராம். இதனால் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் இடையே சமூக உறவு இல்லை என்று கூறப்படுகிறது.

Also Read : சமீபத்தில் 300 கோடியை பாக்ஸ் ஆபிஸில் வாரி குவித்த 5 படங்கள்.. மூன்றே வாரத்தில் விஜய் செய்த சாதனை

மேலும் இவர்கள் இடையே ஒரு நட்பான உறவுமுறை இருந்தால் தான் ரசிகர்கள் படத்தை பார்க்கும் போது திருப்திபடுத்த முடியும். ஆனால் இப்போது விஜய் இந்த விஷயத்தில் தேவை இல்லாமல் மூக்கை நுழைத்ததால் லோகேஷுக்கு தலைவலி ஏற்படுத்தி உள்ளார்.

அதுமட்டுமின்றி இப்போது லியோ படம் 100% வெற்றி பெருமா என்று உறுதிப்பட சொல்ல முடியுமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் லியோ படம் விஜய் படமாக இல்லாமல் லோகேஷின் படமாக இருந்தால் மட்டுமே மிகப்பெரிய வெற்றியை பார்க்க முடியும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Also Read : பிகிலைத் தொடர்ந்து வசூலில் முத்திரை பதித்த வாரிசு.. யாரும் தொட்டுப் பார்க்க முடியாத சாதனையில் விஜய்

Trending News