ராஜா ராணி அர்ச்சனாவிடம் சிக்கிய ஆதாரம்.. கதிகலங்கிப் போன பார்வதி

விஜய் டிவி ராஜா ராணி2 சீரியலில் வில்லி அர்ச்சனாவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தற்போது அர்ச்சனா வசதியான மாப்பிள்ளையாக பார்வதிக்கும் தேர்வு செய்த பாஸ்கரை, தன்னுடைய தங்கை பிரியாவுக்கும் திருமணம் செய்து வைக்க நினைக்கிறாள்.

இதற்காக பார்வதி கல்லூரியில் படிக்கும்போது தவறுதலாக பொறுக்கி விக்கியின் குணம் தெரியாமல், அவனை காதலித்த விடுகிறாள். அதன் பிறகு அவனுடைய சுயரூபம் தெரிந்ததும், சந்தியாவின் துணையுடன் அவனை விட்டு விலகி விடுகிறாள்.

ஆனால் தற்போது அர்ச்சனா விக்கியை பகடைக்காயாக பயன்படுத்தி, பார்வதி-விக்கி இருவரும் இருக்கும் புகைப்படத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்த கல்யாணத்தை நிறுத்த அர்ச்சனா திட்டமிட்டுள்ளார். இதற்காக அர்ச்சனா கையிலிருந்த புகைப்படத்தை விக்கிக்கு அனுப்பி, விக்கி அதை பார்வதிக்கு அனுப்புகிறான்.

இதைப்பார்த்த பார்வதி பதைபதைத்துக்கிறாள். இந்த விஷயம் மட்டும் பாஸ்கர் மற்றும் பாஸ்கர் குடும்பத்திற்கு தெரிந்தால் என்ன ஆகும் என நினைத்து கதறுகிறாள். இதைப் புரிந்து கொண்ட சந்தியா, இந்த போட்டோவில் கூட இருக்கிறது பையனை தாண்டி வேற எதுவும் பெரிதாகத் தெரியவில்லை.

ஆனால் சோஷியல் மீடியாவில் எவ்வளவோ நெருக்கமான புகைப்படம் எல்லாம் வருவது தற்காலத்தில் சகஜமாகிவிட்டது. அப்படி இருக்கையில் இந்த புகைப்படத்தை பார்த்து நீ பயப்படுவாள் என்பதைத் தெரிந்து கொண்டுதான் விக்கி இதை உனக்கு அனுப்புகிறேன்.

அவன் நினைத்தது போலவே நீயும் பயப்படுவது அவனுக்கு சாதகமாக அமைந்துவிடும். ஆகையால் அவனைக் கண்டு பயப்படாமல் எதிர்த்து பதிலடி கொடுத்தால் மட்டுமே பாஸ்கர் உடன் நீ சந்தோசமாக வாழமுடியும் என பார்வதிக்கு சந்தியா தன்னம்பிக்கை கொடுத்து தைரியத்தை வளர்த்து விடுகிறாள்.

இதன் பிறகு பார்வதி விக்கியை கண்டு பயப்படாமல் பாஸ்கரிடம் மெல்ல மெல்ல நடந்ததை எடுத்துக் கூறி புரிய வைக்கப் போகிறாள். இவ்வாறு பாஸ்கர்-பார்வதி திருமணத்தை தடுத்து நிறுத்த அர்ச்சனா எவ்வளவு திட்டம் தீட்டினாலும், அதை சந்தியா அசால்டாக சமாளித்து அவர்களது திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிக்கப் போகிறாள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →