ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கவர்ச்சியாக நடிக்கணும்னா மட்டும் தேடி வராங்க.. லாரன்ஸை தவிர யாருமே கண்டுக்கல, புலம்பி தவிக்கும் நடிகை

Lawrance Movie Actress: பொதுவாக லாரன்ஸ் இயக்கி நடிக்கும் படங்கள் பேயோட ஆட்டத்தை வைத்து தான் இருக்கும். அதனால் தான் ஹீரோயின்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் இருக்காது. இருந்தாலும் இவருடன் ஆட்டம் போட்டு ஆடுவதற்கு, ரொமான்ஸ் பண்ணுவதற்கும் ஏதாவது ஒரு ஹீரோயின் கமிட்டாகி விடுவார்.

அப்படி லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா மற்றும் மொட்டை சிவா கெட்ட சிவா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தவர் தான் லட்சுமி ராய். அப்படிப்பட்ட இவரை மற்ற நடிகர்களாக இருக்கட்டும், இயக்குனர்கள் யாராக இருந்தாலும் கொடுக்கிற வாய்ப்பு அனைத்தும் கவர்ச்சி காட்டி கிளாமராக நடிப்பதற்காகத் தான்.

ஆரம்பத்தில் கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பின் நடித்த படங்கள் கதாநாயகியாக தான். ஆனால் போகப் போக இவருடைய பேச்சும் செயலும் கொஞ்சம் கிளாமர் லுக்கில் இருந்ததால் அதுக்கு தான் இவர் சரிப்பட்டு வருவார் என்று இவரை அப்படியே கிளாமர் ரோலுக்கு ஒதுக்கி விட்டார்கள்.

Also read: ரஜினியிடமே வாலாட்டிய லாரன்ஸ்.. மொத்த நம்பிக்கையும் இழந்ததால் வெறுத்துப்போன சூப்பர் ஸ்டார்

சரி ஆசைப்பட்டது தான் கிடைக்கவில்லை, கிடைத்ததாவது பண்ணலாம் என்று தொடர்ந்து இவருக்கு வந்த வாய்ப்பை எடுத்து அதற்கேற்ற மாதிரி கவர்ச்சியை காட்டி ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடும் வாய்ப்பையும் பெற்றார். தற்போது அதுவும் இல்லாமல் புலம்பித் தவித்து வருகிறார்.

அப்படிப்பட்ட இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதை ஓபன் ஆகவே ஒத்துக் கொண்டிருக்கிறார். அதாவது லாரன்ஸ் தவிர மற்ற எல்லாரும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றால் என்னையே  தேடி வருகிறார்கள். அந்த விதத்தில் லாரன்ஸ் எனக்கு மிகவும் உதவியாக இருந்து நல்ல வாய்ப்பை கொடுத்ததாக கூறி நன்றி தெரிவித்திருக்கிறார் .

Also read: பட்ஜெட்டை விட 4 மடங்கு லாபம் பார்த்த சித்தா.. மரண அடி வாங்கிய லாரன்ஸ், ஜெயம் ரவி படம்

Trending News