புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வாரிசு, துணிவை விட இந்த படங்களுக்கு தான் எதிர்பார்ப்பு ஜாஸ்தியா.. 2023-னின் ஆரம்பத்திலேயே ரணகளமாகும் இணையதளம்

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படமும், வம்சி இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படமும் வரும் பொங்கலன்று ரிலீசாக உள்ளது. இதனிடையே 2014 ஆம் ஆண்டு ஜில்லா, வீரம் திரைப்படங்களுக்கு பின் தல,தளபதி மோதல் மீண்டும் ரசிகர்களிடையே ஆரம்பித்துள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும் அடுத்தடுத்த அஜித், விஜய் கமிட்டாகியுள்ள படங்களின் அப்டேட்டுகள் வெளிவர தொடங்கியுள்ளன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் விஜய் கம்மிட்டான நிலையில், வாரிசு படத்தின் ரிலீசுக்கு பின் இப்படத்தின் பூஜை நடைபெறுள்ளதாகவும் அதற்கு பின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜயின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கி சூப்பர்ஹிட்டான நிலையில், தளபதி 67 படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Also read: ரஜினியை பின்பற்றி வளர்ந்து வரும் விஜய், அஜித்.. வசமாக மாட்டிக் கொண்ட வாரிசு, துணிவு பட பிரமோஷன்

இந்நிலையில் இத்திரைப்படத்தின் அப்டேட் வந்தவுடனே பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் கிட்டத்தட்ட 150 கோடி கொடுத்து தளபதி 67 படத்தை வாங்கியுள்ளது. இதுவே தமிழ் சினிமாவின் இவ்வளவு விலை கொடுத்து வாங்கப்பட்ட முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக நடிகர் அஜித்தின் ஏ.கே.62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள நிலையில், பீல் குட் படமாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் விக்னேஷ் சிவன் அரசியல் கதையை மையமாக வைத்து ஏகே62 படத்தின் கதையை எழுதிய நிலையில் அஜித்திற்கு கதை பிடிக்காமல் போனது. இந்நிலையில் 2000 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான முகவரி பட பாணியில், இப்படத்தின் கதையை விக்னேஷ் சிவன் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் பொங்கலன்று பூஜை போட்டு மும்பையில் தொடங்கப்படவுள்ளதாம்.

Also read: எனக்கு இருக்கும் ஒரே டாஸ்க் இதுதான்.. அஜித் ஏகே 62 படத்தைப் பற்றி பேசிய விக்னேஷ் சிவன்

மேலும் அஜித்தும் உங்கள் இஷ்டப்படி படத்தை எடுங்கள், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என விக்னேஷ் சிவனிடம் தெரிவித்துள்ளாராம். அஜித் பல வருடங்களாக ஆக்ஷன்,மாஸ் கதைகளில் நடித்து வரும் நிலையில், ஏ.கே.62 குடும்பப்படமாக உருவாக்கப்பட உள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் அஜித், விஜயின் நடிப்பில் வெளியான வலிமை, பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியுற்றது.

இந்த தோல்வியை ஈடுக்கட்ட வாரிசு, துணிவு படங்கள் வெவ்வேறு கதைக்களத்தோடு உருவாகியுள்ளது. விஜயின் வாரிசு குடும்பக்கதையை மையப்படுத்தி கமர்ஷியல் படமாகவும், துணிவு வங்கியில் நடக்கும் மோசடி சம்மந்தமான ஆக்ஷன் கதையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இப்படங்களை விட தளபதி 67, ஏ.கே 62 படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

Also read: தளபதி 67க்கு மொத்த ஃபிளானும் ரெடி.. ஆறு மாசம் அட்ராசிட்டி பண்ண போகும் லோகேஷ், விஜய்

Trending News