வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க எகிறும் எதிர்பார்ப்பு.. துணிவு பட முதல் விமர்சனத்தை கொடுத்த இயக்குனர்

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று தினங்கள் தான் இருக்கிறது. வரும் 11ம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் அடுத்தடுத்த ஆச்சரியங்களால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் என அனைத்தும் வெளிவந்து பலரையும் மிரட்டியது.

ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருந்தது துணிவு படத்தின் டிரைலர். இப்படம் ஆரம்பிக்கும்போதே இதில் அஜித் நெகட்டிவ் கலந்த ரோலில் நடிக்கப் போகிறார் என்று பல செய்திகள் வெளிவந்தது. இதனாலேயே அஜித் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இப்படத்துக்காக காத்திருந்தனர். ஏனென்றால் ஏற்கனவே அஜித் மங்காத்தா திரைப்படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருந்தது நல்ல வரவேற்பை பெற்றது.

Also read: முன்கூட்டியே சுதாரித்துக் கொண்ட முதலாளிகள்.. துணிவு ரிலீஸ் பார்த்து, அடிக்கு மேல் அடி வாங்கும் வாரிசு

அதே போன்று இந்த படமும் பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விடும் என்று பேசப்பட்ட நிலையில் ட்ரெய்லரில் அஜித் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் அலப்பறையாக இருந்தது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் 17க்கும் மேற்பட்ட இடங்களில் கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறதாம். இவையெல்லாம் சேர்த்து பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது இப்படத்தின் முதல் விமர்சனத்தை இயக்குனர் வினோத் கொடுத்துள்ளார்.

துணிவு படத்தின் மூலம் மூன்றாவதாக அஜித்துடன் இணைந்திருக்கும் வினோத் இப்படத்தின் முதல் பாதி யாரும் எதிர்பார்க்காத வகையில் பயங்கர ஜாலியாக, பக்கா எண்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து இரண்டாம் பாதி அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யுமாறு இருக்குமாம்.

Also read: அஜித்துடன் இணைந்த விஜய் பட வில்லன்.. அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே62

ஆக மொத்தம் இப்படம் அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் குடும்ப ஆடியன்ஸ் உட்பட ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும் என்று வினோத் தெரிவித்துள்ளார். அந்த வகையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இயக்குனர் தன்னுடைய முதல் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.

இது இன்னும் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வினோத் சொல்வதை பார்க்கும் போது படத்தில் ஆக்சன் காட்சிகள் மட்டுமல்லாமல் குடும்ப ஆடியன்ஸை கவரும் வகையில் சென்டிமென்ட்டும் இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் சில சஸ்பென்ஸ் இப்படத்தில் இருக்கும் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகிறது.

Also read: சென்சார் போர்டு கிளப்பிய புது பிரச்சனை.. துணிவு படத்திற்கு போட்ட தடை

Trending News