வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சூழ்நிலை கைதியான எழில்.. பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டுக்கான மொத்த பணத்தை கோபியிடம் கொடுத்து இந்த வீட்டையே வாங்கி விடுவதாக எழில் சபதம் செய்தார். ஆனால் அவர் கையில் வைத்திருக்கும் 3 கதையையும், வர்ஷியின் தந்தைக்கு எதிராக யாரும் வாங்க முன்வராததால் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.

இருப்பினும் பாட்டிக்கு வர்ஷினியை எழிலுடன் சேர்த்து வைக்க இதான் சரியான நேரம் என, எழிலின் காலில் விழுந்து வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள கெஞ்சுகிறார். மறுபுறம் பாக்யா மற்றும் தாத்தா இருவரும் சொந்த ஊரில் இருக்கும் சொத்துக்களை விற்க ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் அதையும் கோபி செய்ய விடாமல் தடுக்கிறார்.

Also Read: பொண்டாட்டி கூட நடிக்க நம்பர் ஒன் சீரியலை விட்டு விலகிய கணவன்.. விஜய் டிவி துரத்திவிட்டும் அடங்கல

இந்த சூழலில் எழில் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என பாட்டி சொன்னபடி வர்ஷினியை திருமணம் செய்து கொண்டு, வேண்டிய பணத்தை பெற்றுக் கொள்ளலாம். அப்போதுதான் வீடு நம்முடைய கையில் இருக்கும். இல்லையென்றால் அனைவரும் இந்த வீட்டு வீட்டை வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் திருமணத்திற்கு எழில் ஒத்துக் கொள்கிறார்.

இதைக் கேட்டு பாக்கியலட்சுமி உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதேபோல் வர்ஷினி தன்னுடைய திருமணத்திற்கு எழிலின் காதலி அமிர்தாவையும் வர வைக்கிறார். எழில் அமிர்தாவிடம் வீட்டுச் சூழ்நிலையை எடுத்துச் சொல்லி இந்த திருமணத்தை செய்து கொள்ளப் போவதாகவும் அவரிடம் தெரிவிக்கிறார்.

Also Read: விவாகரத்தான 5 போட்டியாளர்களை பொறுக்கி எடுத்த விஜய் டிவி.. டிஆர்பிக்காக இப்படியல்லாமா பண்ணுவீங்க!

அமிர்தா திருமணத்திற்கு எந்த தடையும் சொல்லவில்லை. ஏனென்றால் எழிலின் குடும்ப சூழ்நிலை என்ன என்பது அமிர்தாவிற்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் பாக்யாவிற்கு காதலர்கள் பிரியக்கூடாது, தன்னுடைய நிலைமை தன்னுடைய மகனுக்கும் வரக்கூடாது என கடைசி நேரத்தில் எழிலை மண மேடையில் இருந்து எழுப்புகிறார்.

பிறகு அமிர்தா மற்றும் எழில் இருவருக்கும் தான் திருமணம் செய்து வைக்கப் போகின்றன. இருப்பினும் தற்போது சூழ்நிலை கைதியாக இருக்கும் எழிலின் நிலைமை பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது. இப்படி பரபரப்பான சூழ்நிலை பாக்கியலட்சுமி சீரியலில் இருப்பதால் சின்னத்திரை ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.

Also Read: சன் டிவி டிஆர்பியை உடைக்க பலே திட்டம்.. புத்தம்புது 4 சீரியல்களை இறக்கிய விஜய் டிவி

Trending News