புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மட்டமாக வர்ஷினி வழியில் சிக்கப் போகும் எழில்.. அமிர்தாவின் காதலுக்கு வைக்கும் முற்றுபுள்ளி

பாக்கியலட்சுமி தொடரில் கோபியுடன் ஏற்பட்ட சவாலில் வீட்டை வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எழிலுக்கு இப்போது பண அழுத்தமாக மாறிவிட்டது. முந்தைய எபிசோடில் வேறொரு தயாரிப்பாளர் இடம் படத்தை வாங்க முடிவு செய்து இருந்தான். அதே நேரத்தில் ஈஸ்வரி எழில் நிக்க தானே இந்த நிலைமையை வர்ஷினியிடம் சொல்லியிருந்தார்.

இன்றைய எபிசோடில் அந்த தயாரிப்பாளர் இந்த கதையை தான் வாங்க வேண்டும் என்றால் தனக்கு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதால் முந்தைய தயாரிப்பாளர் இடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற கடிதத்தை வாங்கி வருமாறு எழிலிடம் சொல்லுகிறார்.

Also Read: எழிலால் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்ட பாக்யா.. நடுரோட்டுக்கு வந்த குடும்பம்

இதனால் எழிலும் வர்ஷினியின் அப்பாவை பார்க்க செல்கிறான். அந்த இடத்தில் வர்ஷினியும் இருக்கிறார் எழில் நடந்த விவரத்தை வர்ஷினியின் அப்பாவிடம் கூறி அந்த கடிதத்தை கேட்கிறான். ஆனால் வர்ஷினி அப்பாவோ கதையை நானே வாங்கிக் கொள்கிறேன். தேவையான பணத்தையும் கொடுக்கிறேன். ஆனால் வர்ஷினியை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த நிபந்தனையை மறுக்கும் எழில் தான் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலிப்பாதாகவும் அந்தப் பெண்ணுக்கு வாக்கு கொடுத்து விட்டதாகவும் அதனால் வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறுகிறான். அதற்கு வர்ஷினியின் அப்பா நீ எப்போது அந்த கதைக்கு அட்வான்ஸ் வாங்கி விட்டாயோ அது என்னுடைய கதை என்று சொல்லி எழிலுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுக்கிறார்.

Also Read: எதிர்நீச்சல் சீரியலுக்கு வச்ச ஆப்பு.. என்ட்ரியானது மெய்சிலிர்க்கூட்டும் புத்தம் புது சீரியல்

இதனால் மனம் உடைந்து வீடு திரும்பும் எழிலிடம் செழியனும், ஈஸ்வரியும் பணம் என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்புகின்றனர் . எழில் பதில் சொல்லாமல் மழுப்பவே ஈஸ்வரி, எல்லாம் எனக்கு தெரியும் என்றும் வர்ஷினி அங்கு நடந்ததை சொல்லிவிட்டாள் என்றும் கூறுகிறார். மேலும் எழிலிடம் வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். இதனால் கோபமடைந்த எழில் அமிர்தா மீதான தன் காதலை வீட்டில் போட்டு உடைக்கின்றான்.

எழிலின் இந்த காதலுக்கு கண்டிப்பாக பாக்கியாவை தவிர வேறு யாரும் சம்மதம் சொல்ல மாட்டார்கள். மேலும் வீட்டை வாங்கியே ஆக வேண்டும் என்று அழுத்தம் இருப்பதால் இதையே வீட்டில் இருக்கும் எல்லோரும் காரணம் சொல்லப் போகிறார்கள். வர்ஷினி விரித்த வலையில் எழில் சிக்குவானா என்பது வரும் எபிசோட்களில் தெரியும்.

Also Read: ஒரே கதையை வைத்து 2 சீரியல்களை உருட்டும் விஜய் டிவி.. இதுக்கெல்லாம் டிஆர்பி ரேட்டிங் ஒரு கேடு

Trending News