வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சைடு கேப்பில் அமிர்தாவுக்கு புருஷனான எழில்.. அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் அப்பா கோபிதான் திருமணமான பெண்ணை காதலித்து கல்யாணம் பண்ண நினைக்கிறார் என்றால் அவரின் மகன் எழிலும் திருமணமான பெண்ணை காதலித்து வருகிறார். எழில், அமிர்தா என்ற பெண்ணைக் காதலிக்கிறார்.

அமிர்தா ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவர். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இவர் மாமனார், மாமியார் அரவணைப்பில் உள்ளார். இந்நிலையில் எழில் காதலிப்பது அமிர்தா குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்த பின்பு அவர்கள் இதற்கு சம்மதிக்காததால் அமித்தாவுடன் எழில் நட்பாக பழகி வந்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அம்மா பேச்சுக்கு மறுபேச்சு பேசாத பிள்ளையாக இருந்த எழில் தற்போது ஆக்ஷன் ஹீரோவாகவும் அளவிற்கு சண்டைக் காட்சியில் பின்னி பெடல் எடுக்கிறார். ஏனென்றால் அமித்தாவிடம் சில ரவுடிகள் தவறாக நடந்து கொள்ள முயல்கிறார்கள். மேலும், அமிர்தாவின் மாமனாரையும் கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

இதைக்கேட்டு அமிர்தா கையை பிடித்து அழைத்துச் சென்ற எழில் ரவுடிகளை அடிக்கிறார். ரவுடிகள் யாருடா நீ, அவ உனக்கு என்ன வேணும் என கேட்கிறார்கள். அதற்கு நான் இவங்களோட புருஷன் என எழில் கூறி இந்த ஆக்ஷன் காட்சிகளிலும் அமிர்தா மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார்.

அமிர்தாவும் அதைக்கேட்டு செய்வதறியாமல் நிற்கிறாள். இதே போல தான் எழிலின் தந்தை கோபியும் ராதிகாவை அக்கறையாக பார்த்துக் கொண்ட அவர் மனதில் இடம் பிடித்தார். தற்போது அப்பாவையே மகனும் ஃபாலோ செய்கிறார். அதுமட்டுமல்லாமல் கோபி எட்டடி பாய்ந்தால் எழில் பதினாறடி பாய்கிறார்.

இதன் மூலம் அமிர்தாவுக்கும் எழில் மீது காதல் வர வாய்ப்புள்ளது. ஆனால் எழிலின் குடும்பம் இதற்கு சம்மதிக்கும்சமா என்பது பெரிய கேள்விக்குறிதான். ஆனால் யார் சம்மதித்தாலும் எழில் பாட்டி இதற்க்கு கண்டிப்பாக சம்மதிக்க மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

Trending News