வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாக்யாவுக்கு கட்டம் சரியில்லை போல.. போராடி மீட்டெடுக்கும் எழில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் சில வாரங்களாக டிஆர்பியில் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது. ஏனென்றால் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் பாக்கியலட்சுமி சென்று கொண்டிருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபியின் மனைவி பாக்கியா, காதலி ராதிகா இருவரும் நல்ல தோழிகளாக இருந்தனர். இந்நிலையில் இவர்களின் நட்புக்கு பிரிவு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் நம்ம கோபி. ராதிகாவை வக்கீலின் உதவியால் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருகிறார் கோபி.

இந்நிலையில் தனது அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்ற முழுவீச்சில் இறங்கியுள்ளார் எழில். பாக்யா சமைத்த சாப்பாடை டெஸ்டுக்கு எடுத்துச் செல்லும்போது லட்டில் தான் பிரச்சினை இருக்கிறது என்பது தெரியவருகிறது. ஆனால் லட்டு நாங்கள் செய்யவே இல்லை என செல்வி எழிலிடம் கூறுகிறார். இதைக் கேட்ட எழிலுக்கு எப்படியாவது இந்த பிரச்சினையில் இருந்த அம்மாவை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வருகிறது.

இதனால் எழில், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற தனது அம்மா மீது எந்த தவறும் இல்லை என போலீஸிடம் கூறுகிறார். ஆனால் உன் அம்மா மீது எஃப் ஐ ஆர் போட்டாச்சு எல்லாத்தையும் கோர்ட்ல பார்த்துக்க என போலீஸ் கூறுகிறார். நாளைக்கு எப்படியும் உங்களை வெளியில் எடுத்து விடுவேன் என பாக்யாவுக்கு எழில் ஆறுதல் கூறுகிறார்.

மறுநாள் கோர்ட்டில் ஆதாரத்தை கொடுத்து தனது அம்மா மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்கிறார். கோர்ட்டில் இருந்து வெளியே வரும் பாக்கியா இரு மகன்களையும் ஆரத்தழுவிக் கொள்கிறார். பெற்றால் இதுபோன்ற மகன்களை பெறவேண்டும் என்ற அளவுக்கு பாக்கியலட்சுமி தொடர் பாசப்பிணைப்பால் இணைந்துள்ளது.

மேலும் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பாக்கியா மீண்டும் தனது தொழிலை வெற்றிகரமாக செய்ய தொடங்கயுள்ளார். அவருக்கு உறுதுணையாக எப்போதுமே அவர் மகன் எழிலும் இருப்பார். ஆனால் பாக்கியா போலீஸ் ஸ்டேஷனில் இருந்தபோது கோபி எங்க இருந்தார் என்ற சந்தேகம் குடும்பத்திற்கு எழுந்துள்ளது. மேலும் இதில் இருந்து கோபி எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் மிகப் பெரிய ட்விஸ்ட்.

Trending News