Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி ஏதோ பாக்யாவுக்கு நல்லது பண்ணுகிறோம் என்று நினைப்பில் வேலியில் போற ஓணானை வேட்டிக்குள் விட்ட கதையாக சம்பவத்தை செய்து விட்டார். அதாவது தான் வீட்டை விட்டு போய்விட்டால் பாக்யா தனியாக இருப்பார் என்ற நினைப்பில் பிள்ளைகள் எல்லோரையும் வீட்டிற்கு கூட்டிட்டு வர வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அந்த வகையில் எழில் மற்றும் செழியன் இடம் பேசி வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார். ஆனால் இவர்கள் வந்த பிறகு பாக்யாவுக்கு வேலைகளும் சிக்கல்களும் வரும் என்று கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கவில்லை. இதனால் கடுப்பான பாக்யா மொத்த கோபத்தையும் கோபி மீது காட்டுகிறார்.
உங்களிடம் நான் வந்து கேட்டனா பிள்ளைகளை கூட்டிட்டு வாங்க. அவங்க வந்தா தான் நான் சந்தோசமாக இருப்பேன் என்று சொன்னேனா, அவங்க பேசாமல் அவங்க வேலையை பார்த்துக் கொண்டு சந்தோசமாக இருக்கிறார்கள் எதுக்கு தேவையில்லாத வேலையை பார்த்து எல்லோருக்கும் தலைவலியும் உண்டாக்கிருங்க.
உங்களால் எனக்கு எப்போதுமே நிம்மதியே கிடையாது என்று திட்டி விடுகிறார். எதற்காக பாக்கிய இப்படி திட்டுகிறார் கோபப்படுகிறார் என்று புரியாத கோபி திருட்டு முழியுடன் முழித்து கொண்டிருக்கிறார். உடனே கோபி நான் உனக்கு நல்லது தானே செய்திருக்கிறேன் என்று சொல்கிறார்.
அதற்கு பாக்கியா எது நல்லது எது கெட்டது என்று எனக்கு தெரியும். நீங்க பேசாமல் இங்கு கூட்டிட்டு வந்து விட்டுட்டீங்க ஆனால் இதன் பிறகு உங்க அம்மா பண்ணும் விஷயங்களால் பிள்ளைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவாங்க என்பது எனக்கு தான் தெரியும். அவர்களை சமாளித்து உங்க அம்மா பிரச்சினையை தீர்த்து வைத்து, வீட்டு வேலையை பார்த்து ரொம்பவே அலுத்து போய்விடுவேன்.
எந்த நேரமும் வீட்டு வேலையை பார்த்துக் கொண்டு இருந்தால் நான் எப்படி ரெஸ்டாரண்டுக்கு போய் என்னுடைய வேலையை பார்க்க முடியும் என்று கேள்வி கேட்கிறார். இதற்கு பதில் சொல்ல முடியாத கோபி, ஈஸ்வரி இடம் போய் புலம்புகிறார். இந்த பாக்யா ஆளை மாறிவிட்டார், எப்போ எந்த நேரத்தில் எப்படி முடிவு எடுப்பார், எப்படி யோசிப்பார் என்று தெரிய மாட்டேங்குது என சொல்கிறார்.
உடனே ஈஸ்வரியும் ஆமாம் சாமி போட்டு கோபி சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டுகிறார். இதனை அடுத்து அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது வழக்கம் போல் ஈஸ்வரி, எழில் அமிர்தாவிடம் இன்னொரு குழந்தை பற்றி கேட்டு பிரச்சனையே ஆரம்பித்து விட்டார். அப்பொழுது பாக்யா, கோபியை பார்த்து இதுதான் ஆரம்பம் இனிமேல் தான் இருக்கிறது என்று சொல்கிறார்.
அடுத்ததாக எழில், தனியாக இருக்கும் கோபியை பார்த்து நான் வீட்டிற்கு வர மாட்டேன் சொன்னதற்கு காரணம் உங்க அம்மா தான். பாட்டி எப்ப பாத்தாலும் என்னிடமும் அமிர்தாவிடமும் குழந்தை பற்றி கேட்டு நோகடித்து பேசுவார். இனி எந்த காரணத்தைக் கொண்டு என்னிடமும் அமிர்தாவிடமும் அப்படி பேசக்கூடாது என்று சொல்லி வையுங்கள்.
அப்படி பாட்டி ஏதாவது பேசிவிட்டால் நான் நிச்சயம் அமிர்தாவை கூட்டிட்டு இந்த வீட்டை விட்டு போய் விடுவேன் என்று கரராக பேசி கோபிக்கு செக் வைத்து விடுகிறார். கோபி இது என்னடா வம்பா போச்சு என்ற நினைப்பில் ஈஸ்வரிடம் போய் பேசப்போகிறார். ஆனால் ஈஸ்வரி என்ன ஆனாலும் திருந்த மாட்டார் என்பதற்கு ஏற்ப மாறவும் மாட்டார் மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்கவும் மாட்டார்.
மேலும் இத்தனை நாளாக வீட்டில் தனியாக இருந்து கொண்டு இருந்த இனியா காதல் விஷயத்தை யாரும் கவனிக்கவில்லை. ஆனால் இனி இனியா செய்யும் லீலைகள் அனைத்தும் அமிர்தா மற்றும் ஜெனி கண்டுபிடிக்க போகிறார்கள். அப்பொழுதுதான் பாக்கியாவுக்கும் செல்விக்கும் பெரிய இடியாக இருக்கப் போகிறது.