சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

குண்டத் தூக்கிப் போட்ட எழில்.. ஆடிப்போன பாக்யா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 20 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய மனைவியுடன் ஒரே ரூமில் தங்கி இருக்கும் கோபி, பழக்க தோஷத்தில் கல்லூரி காதலி ராதிகாவுடன் விடிய விடிய கடலை போடுவதை பாக்யா பார்த்துவிடுகிறார்.

மேலும் கோபி ராதிகாவுடன் சாதாரணமாக பேசாமல் கொஞ்சிக் குலவி, டியர் போன்ற ஆசை வார்த்தைகளை அள்ளிப் விடுவதால் அதையெல்லாம் காதில் கேட்டது பாக்யாவின் சந்தேகம் உறுதியானது.

இதன்பிறகு எழிலிடம், ‘ரோட்டில் நடந்து போகும் போது 50 வயது திருமணமான ஒருத்தர், டியர்(Dear) என தொலைபேசியில் யாருடன் பேசி இருப்பார்?’ என பாக்யா கேள்வி கேட்க, உடனே எழில் நிச்சயம் மனைவியாக இருக்க வாய்ப்பில்லை. கள்ளக்காதலியாகத்தான் இருக்க முடியும் என பாக்யாவின் சந்தேகத்தை உறுதிப்படுத்தினான்.

அதுமட்டுமின்றி பாக்யாவின் வீட்டு வேலைக்காரி கோபியின் நடவடிக்கை சரியில்லை என அடிக்கடி கூறி வந்த நிலையில், பாக்யா கோபியை பற்றி தான் சொல்லுகிறார் என பாக்யாவிடமே கேள்வி எழுப்புகிறாள். உடனே பாக்யா அந்த பேச்சை அப்படியே நிறுத்தி விட்டு சமைக்க ஆரம்பித்து விடுகிறாள்.

இவ்வாறு கோபியுடன் ஒரு நாள் தங்கி இருக்கும் போதே பாக்யாவிற்கு இவ்வளவு சந்தேகம் வரத் தொடங்கி உள்ள நிலையில், இனிவரும் நாட்களில் பாக்யா, நிச்சயம் கோபி யாருடன் பழகுகிறான் என்பதை நோட்டமிட்டு கண்டுபிடிக்க போகிறாள். அதற்குப்பிறகுதான் பாக்கியலட்சுமி சீரியலின் கதை சூடு பிடிக்க போகிறது.

இவ்வளவு நாள் பிள்ளைப் பூச்சியாக இருந்து கொண்டிருந்த இருக்கும் பாக்யாவிற்கு மட்டும் கோபியின் கேடுகெட்ட செயல் தெரிய வந்தால், நிச்சயம், இனி வரும் நாட்களில் விஸ்வரூபம் எடுத்து கோபிக்கு சரியான சவுக்கடி கொடுப்பாள் அதை சின்னத்திரை ரசிகர்கள் பார்ப்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News