தமிழ்சினிமாவின் இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்பட்ட மணிவண்ணன், அவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு கோவையில் அரிசி மற்றும் ஜவுளி வியாபாரத்துடன் அவருடைய குடும்பம் அரசியலிலும் ஈடுபட்டிருந்தது. கோவையில் படிக்கும் போது அவருக்கும் நடிகர் சத்யராஜ்-க்கும் நட்பு ஏற்பட்டதோடு மணிவண்ணனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் கல்லூரியில் நடக்கும் நாடகங்களில் அதிகம் கவனம் செலுத்தினார்.
மணிவண்ணனுக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் ஒருவர், கம்யூனிசம் கொள்கையில் ஈடுபட்டதால் அதைப் பின்பற்றிய மணிவண்ணன் நக்சலைட் தலைவர் ஒருவரையும் நேரில் சந்தித்தார். எனவே முக்கிய நக்சல்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ள காவல்துறை திட்டமிட்ட போது, அந்த லிஸ்டில் முதல் பெயராக இயக்குனர் மணிவண்ணனின் பெயர்தான் இருந்தது.
தகவலறிந்த இவரின் நண்பர்கள் மணிவண்ணனை சென்னைக்கு கடத்தினார்கள். சென்னை வந்த மணிவண்ணன் பாரதிராஜாவை புகழ்ந்து நூறு பக்கங்கள் கொண்ட ஒரு ரசிகர் கடிதத்தை எழுதி அவரிடமே உதவி இயக்குனராக சேர்ந்தார். இந்நிலையில் தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்து வந்த பாரதிராஜாவிற்கு மணிவண்ணன் முதல்முதலாக எழுதிக் கொடுத்த வசனம் பாரதிராஜாவின் முதல் தோல்வி படமாக முடிந்தது.
இதனால் நண்பர்களின் கிண்டலுக்கு ஆளான பாரதிராஜா, மணிவண்ணனின் வைத்து நிச்சயம் வெற்றிப் படங்களை கொடுப்பேன் என தன்னுடைய நண்பர்களிடம் சபதம் இட்டார். இதனால் மணிவண்ணனும் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற வெற்றிப்படத்தை எழுதி சூப்பர் ஹிட் கொடுத்து பாரதிராஜாவின் மானத்தைக் காப்பாற்றினார்.
அதன் பிறகு மணிவண்ணனின் குடும்ப வாழ்க்கையிலும் பாரதிராஜாதான் மணிவண்ணனுக்கு தன்னுடைய உறவுக்காரர் பெண்ணையே திருமணம் செய்து வைத்திருக்கிறார். அதன்பிறகு மணிவண்ணனும் தொடர்ந்து படங்களை தனியாக இயக்கிய வெளியிடத் தொடங்கினார்.
அந்த சமயத்தில் மணிவண்ணனுக்கும் சீமானுக்கும் நட்பு ஏற்பட, அதை பிடிக்காத பாரதிராஜா மணிவண்ணனுடன் பேசுவதையே நிறுத்தி விட்டாராம். இதனால் மணிவண்ணனுக்கு பாரதிராஜா பேசாமல் இருப்பது பெரும் மன வலியை ஏற்படுத்தியதாக சிறு குழந்தை போல் கண்ணீர் விட்டு பேட்டி ஒன்றில் அழுது பேசினார்.
எனவே பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வெற்றி இயக்குனர்களாக ஜொலித்த பாக்யராஜ் மற்றும் மணிவண்ணன் போலவே, மணிவண்ணனிடம் இருந்த உதவி இயக்குனர்களாக இருந்தவர்களும் சளைத்தவர்கள் அல்ல. சுந்தர் சி, ஆர்கே செல்வமணி, சீமான், விக்ரமன் உள்ளிட்ட பலர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்த தற்போது வெற்றிப்பட இயக்குனர்களாக மாறி உள்ளனர்.