வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வரிசை கட்டி காத்திருக்கும் ஏஜென்ட் அமரின் 5 படங்கள்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட புஷ்பா 2

ஹீரோக்கள் இப்போதெல்லாம் வில்லனாக நடிப்பது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அதிலும் சமீபத்தில் சூப்பர் ஹிட் அடித்த புஷ்பா, விக்ரம் போன்ற படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பெயர் போனவர் நடிகர் பகத் பாசில். இவரை முன்பு நஷ்ரியாவின் கணவராக தான் தமிழ் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் கடந்த வருடம் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வசூலில் பட்டையை கிளப்பிய விக்ரம் படத்தில் ஏஜென்ட் அமர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

இப்போது ஏஜென்ட் அமர் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகுவதற்காக 5 படங்கள் வரிசை கட்டி காத்திருக்கிறது. அறிமுக இயக்குனர் அகில் சத்யம் இயக்கத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் ‘பசுவும் அற்புத விளக்கும்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஒரு இளைஞனுக்கும் ஒரு வயதான பெண்மணிக்கும் பகத் பாசில் பாலமாக இருந்து அவர்களை எப்படி இணைக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

Also Read: மீண்டும் கேங்ஸ்டர் இயக்குனர் கூட்டணியில் கமல்.. விக்ரம், தளபதி-67 மிஞ்சும் பிரமாண்ட பான் இந்தியா ஹீரோக்கள்

நகைச்சுவை காட்சிகளுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்து இந்த படத்தை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அடுத்ததாக  பகத் பாசில் மற்றும் அபர்ணா பாலமுரளி இணைந்து  நடிக்கும் கன்னட திரைப்படமான ‘தூமாம்’ என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பகத் பாசில் ரோமன்சம் படத்தின் இயக்குனர் ஜித்து மாதவனுடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தை பகத் பாசில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். இந்த படம் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியை மையமாக வைத்து நகைச்சுவை படமாக உருவாகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாக உள்ளது. 

Also Read: புலியே பயந்து பின்னாடி போனா அது புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்.. புல்லரிக்க வைத்த புஷ்பா 2 க்ளிம்ஸ் வீடியோ

அதேபோல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் போலீசாக பகத் பாசில் என்ட்ரி கொடுத்திருப்பார். ஒரு கட்டத்தில் புஷ்ப ராஜூவாக நடித்த அல்லு அர்ஜுனையே பின்னுக்குத் தள்ளிய அளவிற்கு  வெறித்தனமாக பகத் பாசில் நடித்திருப்பார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் பகத் பாசிலை அல்லு அர்ஜுன் அவமானப்படுத்தி ஜட்டியுடன் ஓட வைத்திருப்பது போல் படத்தை முடித்து இருப்பார்கள்.

அதிலும் குறிப்பாக தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் புஷ்பா 2 படத்தின் கிளைமாக்ஸில் புஷ்பாவை பகத் பாசில் சுட்டுக்  கொன்று விடுவார் என்ற செய்தியும் வெளியானது. ஆகையால் புஷ்பா 2-வில் பகத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் தரமான சம்பவத்தை செய்ய காத்திருக்கின்றனர். இந்த வருட இறுதியில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: மாரி செல்வராஜ் கையில் இருக்கும் 4 படங்கள்.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள தனுஷின் படம்

அடுத்ததாக பகத் பாசில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவ்வாறு இந்த 5 படங்கள்தான் பகத் பாசிலின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் 5 படங்களாகும்.

Trending News