Fahad Fassil – ADHD: நம்மை நடிப்பால் பிரமிப்பில் ஆழ்த்திய பகத் பாசிலின் உடல்நிலை பற்றி காலையில் வெளிவந்த செய்தி எல்லோரையும் பதட்டமடைய வைத்திருக்கிறது. வழக்கம் போல ஏதாவது ஒரு வதந்தியாக இது இருந்து விட வேண்டும் என அவருடைய ரசிகர்கள் நினைத்தார்கள்.
ஆனால் நேரம் போக போக பல மீடியாக்கள் இந்த செய்தியை உறுதிப்படுத்தி இருக்கின்றன. சமீபத்தில் பகத் பாஸில் நடித்து வெளியான ஆவேசம் படம் மீண்டும் தென் இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் அவரை ஒரு நட்சத்திர நாயகனாக அமர வைத்தது.
வெற்றியின் படியில் ஏறிக் கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு சறுக்கல் ஏற்படும். அப்படித்தான் பகத் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. பகத் பாஸில் கடந்த ஞாயிறன்று விழா ஒன்றில் கலந்து கொண்டு இருக்கிறார்.
அப்போது அங்கு வந்த டாக்டர் ஒருவரிடம் ADHD என்ற நோய் குணப்படுத்தக் கூடியதா என கேட்டிருக்கிறார். அதற்கு அந்த டாக்டர் சின்ன வயதிலேயே கண்டுபிடித்து விட்டால் கண்டிப்பாக குணப்படுத்தி விடலாம் என சொல்லி இருக்கிறார்.
அப்போ 41 வயது நபருக்கு ADHD இருந்தால் குணப்படுத்த முடியுமா என கேட்டு இருக்கிறார். இதன் மூலம் தான் பகத் பாசிலுக்கு இந்த அரிய வகை நோய் இருக்கிறது என மீடியாக்கள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ADHD என்றால் என்ன?
ADHD என்பது மூளை சம்பந்தப்பட்ட நோயாகும் ( கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு ). Attention deficit hyperactivity disorder என்பதன் சுருக்கம் தான் ADHD. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரொம்பவும் கவன குறைவாகவும், அதிக ஆக்டிவாகவும் இருப்பார்கள். மூளையில் ஏற்படும் வித்தியாசமான ரசாயனத்தால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் பெரும்பாலும் சிறிய வயதிலேயே கண்டுபிடிக்க கூடிய ஒன்று.
ADHD அறிகுறிகள்
கவனக்குறைவு: அடிக்கடி விஷயங்களை இழப்பது, எளிதில் திசைதிருப்பப்படுவது, கவனம் செலுத்துவதில் சிக்கல், கவனக்குறைவான தவறுகளைச் செய்வது மற்றும் வேலையை ஒழுங்கமைப்பதில் சிக்கல்.
அதிவேகத்தன்மை: அதிவேகத்தன்மை என்பது அமைதியின்மை, அதிகமாகப் பேசுதல், படபடப்பு மற்றும் அமைதியாக விளையாடுவதில் சிக்கல் ஆகியவை அடங்கும்.
மனக்கிளர்ச்சி: மற்றவர்களைப் பற்றி பேசுவது, ஒருவரின் முறைக்காக காத்திருக்காமல் இருப்பது மற்றும் கவனமாக பரிசீலிக்காமல் செயல்படுவது.
பகத் பாசிலின் சமீபத்திய அப்டேட்டுகள்
- பகத் பாசில் மோலிவுட்டில் களமிறக்கும் 3 தமிழ் நடிகர்கள்
- பகத் பாசில் நடிப்பில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 6 படங்கள்
- வரிசை கட்டி காத்திருக்கும் ஏஜென்ட் அமரின் 5 படங்கள்