மீண்டும் நடிக்க தொடங்கிய வடிவேலுவிற்கு சினிமாவில் இது எத்தனாவது இன்னிங்ஸ் என்றே தெரியாது. பல ரெட் கார்டுகளுக்கு சொந்தக்காரரான வடிவேலு இப்பொழுது சினிமாவில் நடித்து வருகிறார். 2017 விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு பின் வடிவேலுக்கு சினிமாவில் நடிக்க தடை போட்டனர்.
ஐந்து வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கினார் வடிவேலு. அதன் பின் 2022 ஆம் ஆண்டு மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கினார். நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 என மறுபடியும் ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்தபடமும் கைகொடுக்கவில்லை.
பல வருடங்களாக சுந்தர் சி யுடன் கூட்டணி போடாமல் இருந்த வடிவேலு இப்பொழுது அவருடனும் கேங்கர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவர் நடிப்புக்கு தீனி போடும் என்று சொல்கிறார்கள். அந்த அளவிற்கு படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து பட்டையை கிளப்பி இருக்கிறாராம் சுந்தர்சி.
இப்பொழுது வடிவேலு சூப்பர் குட் பிலிம்ஸ், ஆர்பி சவுத்ரி தயாரிக்கும் மாரிசன் படத்தில் ஹீரோவாக நடித்த வருகிறார். இந்த படத்தில் அவருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் நடிப்பு ராட்சசன் ஆன பகத் பாசிலும் நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள் மாமன்னன் படத்தில் இணைந்து நடித்தவர்கள்.
சூப்பர் ஹிட் பிலிம்ஸ் இந்த படத்தை வெறும் 20 கோடியில் தயாரித்துள்ளது. வடிவேலுக்கு சம்பளமே கிட்டத்தட்ட 10 கோடிகள் வரை கொடுத்திருப்பார்கள். மீதம் தான் மற்ற நடிகர்கள் மற்றும் படத்திற்கு உண்டான செலவு. அப்படி என்றால் பகத் பாசிலின் சம்பளம் தான் எவ்வளவு? இரண்டு கோடிகள் மட்டுமே வாங்கி இருப்பார் என்று தெரிகிறது. இங்கே ஒரு பெரிய ஹீரோ 100 கோடிக்கு மேல் வாங்குகிறார்.