தோல்வி என் அகராதியிலேயே இருக்கக் கூடாது.. பிளாப் படத்தை வெற்றியாக மாத்த ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்

கோலிவுட்டில் ஜாம்பவானாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் இளம் ஹீரோக்களையும் பொறாமைப்படுத்தும் வகையில் இருக்கும். இவருடைய படங்கள் அனைத்தையும் அவருடைய ரசிகர்கள் திருவிழா கொண்டாடுவார்கள்.

இப்படி சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அகராதியில் தோல்வி என்பது இருக்கக் கூடாது என நினைப்பவர். ஆகையால் அவருடைய பிளாப் படத்தை வெற்றி படமாக மாற்றுவதற்காக தற்போது பக்கா பிளான் போட்டிருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை பெற்ற படமானது. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, லோட்டஸ் இன்டர்நேஷனல் தயாரித்தார். படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்தார்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். நல்ல கதையம்சம் கொண்ட இந்த படம் படுதோல்வியை தந்ததால், ரஜினிக்கு பாபா படத்தால் ஏற்பட்ட கெட்ட பெயரை அழிப்பதற்காக படத்தை மறு ஆக்கம் செய்ய உள்ளனர்.

எனவே புதிய அவதாரத்துடன் மீண்டும் வெளியாகும் பாபா படத்தை ரசிகர்கள் விரும்பும் படி மறு திருத்தம் செய்து, புதிய தோற்றத்துடன் டிஜிட்டல் முறையில் மேம்படுத்த உள்ளனர். விரைவில் இதற்கான பணி துவங்கப்படவுள்ளது.

ஆகையால் இதற்காகவே ரஜினி மற்றும் பாபா படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இருவரும் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து பேசி உள்ளனர். இந்த சந்திப்பின் போது ரஜினி பக்கா பிளான் போட்டு பாபா படத்தை மீண்டும் வெற்றி படமாக திட்டமிட்டிருக்கிறார். மேலும் புது பொலிவுடன் வெளியாகும் பாபா படத்தின் மீதான எதிர்பார்ப்பு சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →