திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

சொன்னது எல்லாம் பொய்.. கடைசியாக விஜயகாந்த் பற்றி வெளிவந்த உண்மை

தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் நடிகர் விஜயகாந்த். பல தமிழ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்த அவர் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு தீவிர அரசியலில் குதித்தார்.

தனியாக கட்சியை தொடங்கி அதில் வெற்றியும் கண்ட அவர் எப்படியும் முதல் அமைச்சர் ஆகிவிடுவார் என்று நினைத்த வேளையில் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவரை பொதுவெளியில் காண்பதே அரிதாகிவிட்டது. அவ்வப்போது அவருடைய போட்டோக்கள் வெளிவந்து அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில் கேப்டன் மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று வெளிவந்த செய்தியால் ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். ஆனால் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இந்த செய்தியில் உண்மை இல்லை, அவர் உடல் நிலை மோசமாக இருக்கிறது, அதனால் அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

இதனால் கேப்டன் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பாரா, மாட்டாரா என்ற ஒரு குழப்பம் அனைவருக்கும் இருந்தது. இந்த சமயத்தில் தான் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மேலும் அவர் ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி விஜய்மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அந்த திரைப்படத்தில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் விஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் ஏற்கனவே எடுத்து முடித்து விட்டதாக கூறுகின்றனர். கூட்டம் இல்லாத சமயத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டிய ஓரிரு காட்சிகளை அவர்கள் இருவர் மட்டுமே இருந்து எடுத்து விட்டார்களாம்.

மேலும் அந்தப் படத்தில் விஜயகாந்த் ஒரு முக்கியமான வசனத்தை பேசுவாராம் அத்துடன் படம் முடிந்து விடுமாம். கதைக்கு தேவை என்பதால் தான் விஜயகாந்தும் அந்த காட்சியில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆக கூடிய விரைவில் விஜயகாந்தை நாம் படத்தில் பார்க்கலாம் என்று திரையுலகில் திட்டவட்டமாக சொல்கின்றனர்.

Trending News