இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணம் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துவிட்டு உடனே மறுமணம் செய்து கொள்வது சகஜமாகிவிட்டது. அப்படி மறுமணம் செய்து கொண்ட எத்தனையோ பிரபலங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த காலத்திலேயே மூன்று திருமணங்கள் செய்து கொண்ட நடிகையும் இருந்திருக்கிறார்.
70, 80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர்தான் லட்சுமி. பல குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் இதுவரை ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை அப்படியே உள்வாங்கி கேரக்டராகவே மாறிவிடும் சிறந்த நடிகையாக இவர் இருக்கிறார்.
Also read : வாய்ப்புக்காக பொய் சொன்ன எம்ஜிஆர்.. சட்டையை பிடித்து சண்டை போட்ட இயக்குனர்
அதனாலேயே இவர் எம்ஜிஆர், சிவாஜி, சிவக்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். அழகு இருக்கும் இடத்தில் கோபமும் இருக்கும் என்பதைப் போல இவர் இயக்குனர்கள் அனைவரிடமும் சற்று பிடிவாதமாகத் தான் பேசுவாராம். சில சமயம் சண்டை கூட போட்டிருக்கிறாராம். அந்த அளவுக்கு இவர் தைரியமான பெண்மணியாக இருந்திருக்கிறார்.
சினிமாவில் மட்டுமல்லாமல் இவருடைய தனிப்பட்ட வாழ்விலும் இவர் புரட்சிகரமான பெண்ணாகவே இருந்திருக்கிறார். அந்த வகையில் இவர் இதுவரை மூன்று திருமணங்கள் செய்திருக்கிறார். தன்னுடைய 17ஆவது வயதிலேயே அதாவது 1969 ஆம் ஆண்டு பெற்றோர்கள் பார்த்த பாஸ்கரன் என்பவரை லட்சுமி திருமணம் செய்து கொண்டார்.
Also read : டி ராஜேந்தரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய எம்ஜிஆர்.. கூடுவிட்டு கூடு பாய்ந்த ரகசியம்
ஆனால் ஐந்து வருடங்களிலேயே இவர் தன் முதல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து 1975 ஆம் வருடம் பிரபல நடிகர் மோகன் சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் பல திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இந்த திருமணமும் 5 வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது.
அதன் அடிப்படையில் 1980 ஆம் ஆண்டு இரண்டாவது கணவரை விவாகரத்து செய்த லட்சுமி அதன் பிறகு 1987 ஆம் ஆண்டு நடிகர் சிவச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் ரோசாப்பூ ரவிக்கைக்காரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்படி லட்சுமியின் வாழ்க்கை சில பல விமர்சனங்களுக்கும் ஆளாகி இருக்கிறது. ஆனாலும் அவர் தனக்கு பிடித்த வாழ்க்கையை தைரியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Also read : திமிரை விட்டுக் கொடுக்காமல் உச்சாணி கொம்பிலே நின்ற நடிகர்.. இறங்கி வந்த எம்ஜிஆர், சிவாஜி