புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிக் பாஸ் சீசன் 7ல் அதிகம் பேசப்பட்ட டாப் 5 பிரபலங்கள்.. வரலாற்றையே புரட்டி போட்ட கிளாமர் குயின்

Bigg Boss Season 7 Famous 5 Contestants: ரியாலிட்டி ஷோ என்றாலே அது பிக் பாஸ் என்றாகிவிட்டது. இருந்தாலும் மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வழக்கத்தை விட துவங்கப்பட்ட நாளிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த சீசனின் டிஆர்பி ரேட்டிங்கும் நாளுக்கு நாள் எகிறுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரசிகர்களின் மத்தியில் பாப்புலரான ஐந்து பிரபலங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதில் அதிரடியாக முதல் இடத்தை பிடித்து வரலாற்றையே புரட்டி போட்டு இருக்கிறார் கிளாமர் குயின். இந்த லிஸ்டில் 5-வது இடத்தில் யூட்யூப்பர் பூர்ணிமா ரவி இருக்கிறார். யூட்யூப்-யில் செம ஃபேமஸான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னதான் மாயாவுக்கு ஜால்ரா தட்டினாலும், இவர் செய்யும் க்யூட்டான விஷயம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இதன் தொடர்ச்சியாக 4-வது இடம் சீரியல் நடிகர் விஷ்ணுவிற்கு கிடைத்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே விஷ்ணு பூர்ணிமாவுடன் காதல் ட்ரக் ஓட்டினார். ஆனால் அது அப்பட்டமான நாடகம் என்று தெரிகிறது. அவ்வப்போது அந்நியனாக மாறி பிக் பாஸ் வீட்டை கதற விடும் விஷ்ணு, வீக் எண்டு ஆனால் மட்டும் அம்பியாகி விடுகிறார். அதிலும் கடந்த வாரம் அர்ச்சனாவுடன் இவர் போட்ட சண்டை காதை கிழிக்கும் அளவுக்கு இருந்தது.

Also read: யாருக்குமே தகுதி இல்லை.. கடைசியாக கும்பிடு போட்ட பிக் பாஸின் குருநாதர்

சீசன் 7ல் ஃபேமஸான 5 போட்டியாளர்கள்

3-வது இடத்தில் சீரியல் நடிகையும் டான்சருமான ரவீனா இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை துவங்கும் போதே நாங்கள் இருவரும் லவ்வர்ஸ் என்று ரவீனா- மணி இருவரும் காதல் லீலைகளை தொடர்ந்து நடத்துகின்றனர். இருப்பினும் ரவீனாவின் விளையாட்டு தனித்துவமாக இருக்கிறது. இதனால் இவர் பிக் பாஸ் ரசிகர்களிடம் பேமஸ் ஆகி விட்டார்.

2-வது இடம் சீரியல் நடிகை அர்ச்சனாவுக்கு கிடைத்திருக்கிறது. ஒரு வைல்ட் கார்ட் போட்டியாளர்களுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்றால் அது அர்ச்சனாவிற்கு தான். என்னதான் இவர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் வாரத்தில் அழுது கொண்டே இருந்தாலும், இப்போது செம ஸ்போட்டிவாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இவர் டைட்டில் வின்னர் ஆவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

முதல் இடத்தில் கிளாமர் குயின் விசித்ரா உள்ளார். 50 வயதைக் கடந்த ஒரு போட்டியாளர் எப்போதும் ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் அவர்கள் இரண்டு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் எலிமினேட் ஆகி விடுவார்கள். கிளாமர் குயின் விசித்ரா தான் இளம் போட்டியாளர்களின் மத்தியில் பிக் பாஸ் வீட்டில் 60 நாட்களைக் கடந்த போட்டியாளர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு காரணம் இந்த சீசனில் அதிக கன்டென்ட் கொடுக்கும் நபராக விசித்ரா பார்க்கப்படுகிறார்.

Also read: ஜோவிகாவை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகும் பிக் பாஸ்.. ரிவ்யூ ஷோவில் சீக்ரெட்டை உளறிய வனிதா

Trending News