வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

நடிகைகளாக மாறிய 5 செய்திவாசிப்பாளர்கள்.. அதுவும் பிரியா பவானி சங்கர் வேற லெவல்

ஆரம்பத்தில் செய்தி தொகுப்பாளராக இருந்த சிலர் அதன் மூலம் பிரபலமாகி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிக்க வந்துள்ளனர். இவ்வாறு ஆரம்பத்தில் தமிழ் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்பு நடிகைகளாக மாறிய 5 பிரபலங்களை பார்க்கலாம்.

பாத்திமா பாபு : பார்த்திபன் பாபு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். இதன் மூலம் பல சின்னத்திரை தொடர்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து பல வெள்ளித்திரை திரைப்படங்களிலும் பாத்திமா பாபு நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

பிரியா பவானி சங்கர் : கடந்த 2011 ஆம் ஆண்டு செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் மற்றும் கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அனிதா சம்பத் : அனிதா சம்பத் பல வருடங்களாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இதன் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற இவர் பிக் பாஸ் சீசன் 4 இல் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அனிதா சம்பத், விமல் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

திவ்யா துரைசாமி : செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் திவ்யா துரைசாமி. இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதன் மூலம் இவர் வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் திவ்யா துரைசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

லாஸ்லியா மரியனேசன் : தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்குபெற்றார். இந்நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து ஹர்பஜன்சிங் நடிப்பில் வெளியான பிரெண்ட்ஷிப் படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் லாஸ்லியா நடித்திருந்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

Trending News