ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வாழ்ந்து, கேரியரை தொலைத்த 7 நடிகைகள்.. புகழின் உச்சத்தை ருசித்த சில்க் ஸ்மிதா!

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் 80-களிலும், 90-களிலும் திரைப்படங்களில் பாடல்களுக்கு நடனம் புரிவதற்கு என்று சில நடிகைகள் இருந்தனர், அதில் சிறந்த 7 பேரை பற்றி இப்போது காணலாம்.

ஜெயமாலினி: ஜெகன் மோகினி, மாயமோகினி உட்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஜெயமாலினி. அதிகம் தெலுங்கு படத்தில் நடித்திருந்த போதும் இவர் நடித்த பல திரைப்படங்கள் தமிழிலும் நல்ல பெயர் பெற்றது. வசூலும் குறைவில்லாத காரணத்தால் அவர் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயமாலினி என்றதும் அவருடைய அழகான இடுப்பும் வளைவுகள் கூடிய நடனமும் நிச்சயம் நினைவிற்கு வரும்.

அனுராதா: தமிழில் பெரும்பாலும் எண்பதுகளின் பிற்பாதியில் முக்கால்வாசி திரைப் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் புரிவதற்கு என்றே அவதரித்தவர் அனுராதா. இவருடைய கவர்ச்சி பாடல் இடம்பெற்றாலே அந்தத் திரைப்படம் பிரபலமாகும் காலம் என்று ஒன்று இருந்தது. சினிமா போஸ்டர்கள் கதாநாயகன் படம் இருக்கிறதோ இல்லையோ அனுராதாவின் கவர்ச்சி புகைப்படம் நிச்சயம் இடம்பெறும். காலப்போக்கில் அனுராதா வில்லி நடிகையாகவும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

விசித்திரா: அமைதிப்படை, முத்து உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவும் கவர்ச்சி நடன மங்கை ஆகவும் தோன்றியவர் விசித்திரா. வளைவுகளும் பெரிய அங்கங்களும் கொண்ட காரணத்தால் சீக்கிரம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் பின்னாளில் கவர்ச்சி ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். முத்து திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு பெரிய திரையில் இருந்து ஒதுங்கியவர் அவ்வப்போது சின்னத்திரையில் நடித்து வந்தார்.

டிஸ்கோ சாந்தி: தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் டிஸ்கோ சாந்தி. டிஸ்கோ நடனத்தை சிறப்புடன் ஆடும் திறமை பெற்றதால் இவரது பேருக்கு முன் டிஸ்கோ ஒட்டிக்கொண்டது. வெற்றி விழா, நீ பாதி நான் பாதி, சிவா என்று பல திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். ஸ்ரீஹரி என்பவருடன் திருமணம் புரிந்து 2013ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டார். இவருடைய தங்கை லலிதா குமாரி நடிகர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிலட்சுமி: கருப்பு வெள்ளை படம் தொட்டு கவர்ச்சியில் கலக்கியவர் ஜோதிலட்சுமி. பல திரைப் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் புரிந்த பெருமை இவரையே சேரும். ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், ரஜினி, கமல் உட்பட பல முதன்மை நடிகர்கள் படத்திலும் கவர்ச்சி நடனம் புரிந்துள்ளார். சேது படத்தில் இவர் ஆடிய கான கருங்குயிலே பாடல் மிகப்பிரபலம். இவருடைய மகள் ஜோதிமீனாவும் கவர்ச்சி நடிகையாக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்போன்சா: மாம்பழத்தின் வகை பெயர்கொண்ட அல்போன்சா சிறந்த நடனக் கலைஞர். பல திரைப்படங்களில் இவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் புரிந்துள்ளார். தொண்ணூறுகளின் பிற்பாதியில் வந்த முக்கால்வாசி திரைப்படங்களில் ஒரு பாடலுக்காகவேணும் இவர் தோன்றி இருப்பார். நடனக்கலைஞர், நடிகர் ராபர்ட் டிசோசா இவரது தம்பி என்பது கூடுதல் தகவல்.

சில்க் ஸ்மிதா: தென்னிந்தியாவில் கவர்ச்சி நடனம் புரியும் நடிகைகளின் ராணி என்று சொன்னால் அது சில்க்ஸ்மிதா தான். ஒற்றைப் பாடலுக்கு ஆடவும் கவர்ச்சியாக நடிக்கவும் எத்தனை பேர் வந்தபோதும் எப்பொழுதும் முதலிடத்தில் இருந்தவர் சில்க். சில்க் ஸ்மிதா நடித்த காரணத்துக்காகவே பல திரைப்படங்கள் ஓடியது என்பது வரலாற்று உண்மை. யார் கண் பட்டதோ தெரியவில்லை தனது சொந்த வாழ்க்கையை சீக்கிரமே முடித்துக்கொண்டார் சில்க் ஸ்மிதா.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் மிகப் பிரபலமாக இருந்த இது போன்ற கவர்ச்சி நடிகைகள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனார்கள். இதற்கு முக்கிய காரணம் என்று நாம் நினைப்பது கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த பம்பாய் மற்றும் மலையாள வரவு நடிகைகளை அதிக கவர்ச்சி காட்ட தயாரான போது இவர்களுடைய தேவை படங்களில் இல்லாமல் போனது.

Trending News