கிராமத்து கதை, யதார்த்தமான நடிப்பு என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருப்பவர் அந்த நடிகர். சினிமாவில் ஓரளவுக்கு வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகர் சமீபகாலமாக சரியான வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் சமீபகாலமாக பண மோசடி உள்ளிட்ட பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அதில் முக்கிய திருப்பமாக நடிகர் தனக்கு ஜோடியாக நடித்த இளம் நடிகை ஒருவருக்கு கொடுத்த டார்ச்சர் பற்றிதான் தற்போது திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.
நடிகர்கள் பலரும் தயாரிப்பாளராக களம் இறங்கி வரும் நிலையில் சீட்டிங் பட நடிகரும் அந்த படத்தை தயாரித்து, நடித்து இருந்தார். அந்தப் படத்தில் முதலில் நடிகருக்கு ஜோடியாக நடித்தது வாரிசு நடிகரின் அடல்ட் படத்தின் மூலம் அறிமுகமான அந்த இளம் நடிகை தான்.
குறிப்பிட்ட சில நாட்கள் ஷூட்டிங் முடிந்தபிறகு தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நடிகரே அந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். அப்போது நடிகர் தனக்கு ஜோடியாக நடித்த நடிகையிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதன் பிறகு அந்த ரூமில் என்ன நடந்ததோ தெரியவில்லை நடிகை கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த படத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று பாதியிலேயே கிளம்பி விட்டாராம். அதன் பிறகுதான் நடிகர் அந்த கதிர் பட நடிகையை பல லட்சம் கொடுத்து புக் பண்ணியிருக்கிறார்.
அந்த நடிகையோ மார்க்கெட் இல்லாமல் குறைந்தபட்ச சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஒரு சில படங்களில் தலைகாட்டி வந்தார். ஆனால் நடிகரோ அந்த நடிகைதான் வேண்டும் என்று அடம்பிடித்து கிட்டத்தட்ட நான்கு மடங்கு சம்பளத்தை அதிகமாக கொடுத்து படத்தில் நடிக்க வைத்தாராம். நடிகரின் இந்த செயலைப் பற்றி தான் தற்போது திரையுலகில் பேச்சாக கிடக்கிறது.