திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் கேட்ட கேள்வியால் வேதனையில் பிரபல நடிகர்.. இப்ப வரை ஆறுதலாக இருக்கும் அஜித்

விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்களிடமிருந்து அன்பு கிடைக்கிறதோ அதே அளவுக்கு சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் இவரை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். அந்த அளவிற்கு நடிப்பிலும் சரி, அவருடைய குணாதிசயங்களை வியந்து பார்க்கும் அளவிற்கு இவருடைய கேரக்டர் இருக்கும். அப்படிப்பட்ட இவர் ஒரு நடிகரை பார்த்து அதுவும் இவர் கூட சேர்ந்து நிறைய படங்களுக்கும் மேலாக நடித்தவரை பார்த்து நீங்கள் யார் எனக்கு உங்களை தெரியாது என்று சொல்லி இருக்கிறார்.

இதைக் கேட்டதும் அந்த நடிகருக்கு மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மன வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவர் மனதிற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பி இருக்கிறது. எப்படி இவர் நம்மளை இந்தளவுக்கு மறந்து விட்டார் என்று தெரியவில்லையே. நம்ம ஒன்னும் ஒன்று, இரண்டு படங்களில் நடிக்கவில்லையே இவருடன் சேர்ந்து எத்தனை படங்களில் நடித்திருக்கிறேன்.

Also read: எவ்வளவு பட்டும் திருந்தாத விஜய்.. பாலகிருஷ்ணாவை தொடர்ந்து மாட்டிய தளபதி – 68

அப்படி இருக்கும்போது என்ன போய் யாருன்னு கேட்டாரு, மறந்துட்டேன்னு சொல்றது எனக்கு கஷ்டமாக இருக்கு என்று அவருக்குள்ளே புலம்பி கொண்டு இருந்திருக்கிறார். அதிலும் அவர் கூட சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறேன் எப்படி இவரால் என்னை இவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியும் என்று மன வேதனை பட்டிருக்கிறார். இவர் கடைசியாக விஜய்யுடன் புலி படத்தில் நடித்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை புலி படத்தில் வேதாளம் என்ற கேரக்டரில் நடித்த சம்பத் ராம்.

இதற்கு முன்னதாக திருப்பாச்சி, ஆதி, போக்கிரி, வேலாயுதம் மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்படிப்பட்டவரை தான் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் அஜித் இவரை மறக்காமல் இன்னும் வரை இவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

Also read: துரோகங்களையும், அவமானங்களையும் சந்தித்து இறுகிப்போன அஜித்.. புட்டு புட்டு வைக்கும் எதிர்நீச்சல் குணசேகரன்

அஜித்துடன் நடித்த முதல் படத்திலிருந்து இப்பொழுது வரை பார்க்கும் இடமெல்லாம் எப்படி இருக்கீங்க சம்பத் என்று கேட்டு வீட்டில் அனைவரும் நன்றாக இருக்கிறார்களா என்று கேட்டு பேசும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும். இப்படி வளர்ந்து இருக்கும் ஒரு நடிகர் நம்மளை பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என்று நலம் விசாரிப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இவர் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியை அறிமுகக் காட்சியில் அவரை புல்லட்டில் அழைத்துச் செல்லும் காட்சிக்கு வருவார். அதுமட்டுமின்றி இதற்கு முன்னதாக திமிர் பிடித்தவன், சங்கத் தலைவன், காஞ்சனா 3 போன்ற பல படங்களில் நடித்து மிகவும் பரிச்சயமான ஒரு நடிகர். ஆனால் இவரை பார்த்து விஜய் அந்த மாதிரி கேட்டது தான் இவருக்கு மிகப்பெரிய மனவேதனையை கொடுத்திருக்கின்றது என்று தற்போது இவர் பேசிய ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Also read: டைம் பாஸ்க்கு காதலித்து நடிகையை கழட்டி விட்ட விஜய்.. அப்பா கண்ட்ரோலில் இருந்ததால் பரிபோன காதல் வாழ்க்கை

Trending News