சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க இருந்த விஜயகாந்த்.. நண்பரால் திசைமாறிய வாழ்க்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் அனைவருக்கும் பிடித்த ஒரு திரைப்படம் முரட்டு காளை. இந்தத் திரைப்படத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற பொதுவாக என் மனசு தங்கம் என்ற பாடல் அன்றைய காலகட்டத்தில் ரொம்பவும் பிரபலமாக இருந்தது.

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெய்சங்கர், ரதி, சுமலதா ஆகியோர் நடித்திருந்தனர். எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் நடிகர் ஜெய்சங்கர் நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது கேப்டன் விஜயகாந்த்.

விஜயகாந்த் அப்பொழுதுதான் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து இருந்தார். அப்போது வந்த இந்த வில்லன் வாய்ப்புக்கு முதலில் யோசித்த விஜயகாந்த் பிறகு அந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இதற்காக அவருக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.

ஆனால் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் நீ சினிமாவில் ஹீரோவாக நடித்து நிறைய சாதிக்க வேண்டும் அதனால் இந்த வில்லன் வாய்ப்பை ஏற்க வேண்டாம் என்று சொல்லியுள்ளார்.

விஜயகாந்த் சினிமாவில் இந்த அளவுக்கு பெயரும், புகழும் அடைந்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் இப்ராகிம் ராவுத்தர். இதனால் நண்பனின் பேச்சுக்கு மதிப்பளித்து விஜயகாந்த் முரட்டு காளை திரைப்படத்தில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

அதன் பிறகுதான் ஜெய்சங்கர் அந்த கேரக்டரில் நடித்தார். கேப்டன் அந்த பட வாய்ப்பை தவற விட்டாலும் அதன் பிறகு அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் ரஜினிக்கு இணையான ஒரு ஹீரோவாக மாறினார். அவர் நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பு, நடிகர் சங்கத்தலைவர், அரசியல் என்று தற்போது பல துறைகளிலும் தன் திறமையை காட்டி கலக்கி வருகிறார்.

Trending News