புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பிரமாண்டமாக உருவாகும் ராம்சரணின் ஆர் சி 15.. வில்லனாக மிரட்டப் போகும் பிரபலம்

தெலுங்கு நடிகரான ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது. பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உட்பட பலர் நடித்திருந்த அந்த திரைப்படம் தமிழ்நாடு உட்பட பல இடங்களிலும் வசூலை வாரி குவித்தது.

இதன் மூலம் ராம் சரணுக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினார். தற்போது தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர், ராம் சரணை வைத்து ஆர் சி 15 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கிட்டத்தட்ட 170 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்பராஜ் எழுதி இருக்கிறார். இதில் ராம் சரண் உடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அரசியல் கதை களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப் படத்தில் கொடூர வில்லனாக இயக்குனரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார். படத்தில் அவர் முதலமைச்சராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவருடைய கதாபாத்திரத்தை பற்றிய தகவல்களை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.

மேலும் படத்தில் ராம்சரண் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்கள் ஆன அன்பு மற்றும் அறிவு இருவரும் இந்த படத்திற்கான சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்கள் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் துர்கா என்ற படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் உட்பட பல காட்சிகள் ரசிகர்கள் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்தப் படம் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

Trending News