திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தம்பியை போல் செல்வராகவனை வளர்த்துவிட ஆசைப்படும் நடிகர்.. வாயை பொழந்த கோடம்பாக்கம்

தனுஷின் இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவருடைய அண்ணன் செல்வராகவன் தான். இவர் தன்னுடைய இயக்கத்தின் மூலம் துள்ளுவதோ இளமை, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற பல படங்களில் தனது தம்பி தனுஷை வைத்து இயக்கி வெற்றி கொடுத்துள்ளார்.

இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது மீண்டும் செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் நானே வருவேன் படம் உருவாகி வருகிறது. மேலும் செல்வராகவனும் தற்போது நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.

விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கதாநாயகனாக சாணிகாகிதம் படத்தில் நடித்துள்ளார். தற்போது பிரபல நடிகர் ஒருவர் செல்வராகவனை நாடி வந்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளி விழா நாயகன் மைக் மோகன் தான் செல்வராகவனை சந்தித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார் மோகன். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு ஹரா என்ற படத்தில் கதாநாயகனாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தளபதி 66 படத்தில் விஜய் அண்ணனாக மோகன் நடிக்கயுள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவியது. ஆனால் அதற்கு மோகன் மறுப்பு தெரிவித்தார். தற்போது செல்வராகவனை சந்தித்து ஒரு படம் பண்ணலாம் என மோகன் கூறியுள்ளார்.

செல்வராகவனும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இதற்கான கதையை விரைவில் தயார் செய்ய உள்ளாராம் செல்வராகவன். இதனால் மோகன் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News