சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வடசென்னை ராஜனாக முதலில் மிரட்ட இருந்த நடிகர்.. 4 வருடத்திற்கு பின் உண்மையை கூறிய அமிர்

வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் கேங்ஸ்டர் படமாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் வடசென்னை. இப்படத்தில் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி என பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தையும் வித்தியாசமான முயற்சியில் இயக்கியிருந்தார் வெற்றிமாறன்.

வடசென்னை படம் முழுக்க சண்டை, ரத்தம், கொலை வன்முறையாகவே இருக்கும். இப்படத்தில் தனுஷ் தான் கதாநாயகனாக இருந்தாலும் இதற்கு ஆணிவேராக இருந்தது அமீர் தான். இவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி தான் நடிப்பதாக இருந்ததாம்.

ஆனால் அமீர் வடசென்னை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்த விஷயம் அவருக்கு தெரிய வந்துள்ளது. அதனால் அப்போதே இப்படத்தை விஜய் சேதுபதியே மனதில் வைத்துக்கொண்டு வடசென்னை படத்தை பார்க்க வராதீர்கள் என அமீர் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஏனென்றால் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தாலும் தற்போது லாபகரமான சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்ற உத்தியை கையாண்டு வருகிறார். மேலும் பல வெற்றிகரமான படங்களை கொடுத்துள்ளார்.

அதனால் அவருடைய நடிப்பை என்னால் ஈடுகட்ட முடியாது என அவர் கூறியிருந்தார். ஆனால் வடச்சென்னை படத்தின் மையப்புள்ளியான அமீர் படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும் வடசென்னை டானாக நடிப்பில் மிரட்டியிருந்தார். மேலும், மறுபக்கம் ஆண்ட்ரியாவுடன் காதலிலும் அசத்தியிருந்தார்.

அமீர், ராஜன் கதாபாத்திரத்துடன் ஒன்றி இருந்தார். அவருடைய தோற்றமும், பாவனையும் அதற்கு ஏற்றார் போல் இருந்தது. வடசென்னை படத்தில் சிம்பு மற்றும் விஜய்சேதுபதி நடித்திருந்தால் இந்த அளவுக்கு படம் இருந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

Trending News