செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

டாப் ஹீரோவுக்கு இப்படி ஒரு மனைவியா.! நடிகர் வேஷம் எல்லாம் சினிமாவில் தானா

திரையுலகில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர் அந்த முன்னணி நடிகர். அவர் எங்கு சென்றாலும் அந்த செய்தி ஊடகங்களில் அன்றைய தலைப்பு செய்தியாக மாறிவிடும். அந்த அளவுக்கு நடிகருக்கு பேரும், புகழும் இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் நடிகரின் மனசு என்னவோ சின்னதுதான். ஏனென்றால் கோடிகளில் புரளும் நடிகரின் வீட்டில் நடிகருக்கு என்று தனியாக 5 விலை உயர்ந்த கார்கள் இருக்கிறதாம். அந்த கார்களுக்கு என்று தனியாக 5 டிரைவர்களும் இருக்கிறார்களாம்.

அவர்கள் அனைவரையும் வேலைக்கு சேர்க்கும் போதே நடிகரின் மனைவி சில கண்டிஷன்கள் போட்டிருக்கிறார். அதாவது நடிகர் எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றால் அழைத்து செல்வது மட்டுமே டிரைவரின் வேலையாக இருக்க வேண்டுமாம். இடையில் நடிகரிடம் எந்த விஷயங்களை பற்றியும் அவர்கள் பேச கூடாதாம்.

நடிகர் எங்கு சொல்கிறாரோ அங்கு அவரை விட்டுவிட்டு, மீண்டும் அவர் கூப்பிடும் போது காரில் அழைத்து வரவேண்டும். இதற்கிடையில் டிரைவர்கள் தங்கள் குடும்ப கஷ்டங்களை சொல்லி நடிகரிடம் பண உதவி கேட்பது போன்ற வேலை எல்லாம் இருக்கக் கூடாது என்று நடிகரின் மனைவி கண்டிஷன் போட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஒருநாள் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது நடிகரே அந்த டிரைவரை பற்றி விசாரித்துள்ளார். பேச்சு மும்முரத்தில் அந்த டிரைவர் தன்னுடைய மனைவியின் கிட்னி ஆபரேஷன் பற்றி கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த நடிகரும் டிரைவருக்கு பண உதவி செய்துள்ளார்.

உதவி என்றால் பெரிய உதவி என்று நினைத்துவிட வேண்டாம். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அந்த நடிகர் அந்த டிரைவருக்கு வெறும் ஏழாயிரம் ரூபாயை அதுவும் கிட்னி ஆபரேஷனுக்கு என்று கொடுத்திருக்கிறார். டிரைவரும் வேறு வழி இன்றி அதை வாங்கி உள்ளார்.

இது எப்படியோ அந்த நடிகரின் மனைவிக்கு தெரிந்து விஷயம் பெரிய பிரச்சனையாகி உள்ளது. நீ எப்படி அவருடன் குடும்ப கதையை பேசலாம் என்று அந்த டிரைவரை கண்டித்த நடிகரின் மனைவி உடனே அவரை வேலையை விட்டு தூக்கி விட்டாராம். ஹீரோ வேஷம் எல்லாம் சினிமாவில்தான் போல என்று விஷயத்தை கேள்விப்பட்டவர்கள் சத்தமில்லாமல் கிசுகிசுக்கின்றனர்.

Trending News