தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக உள்ள சில நடிகைகளுக்கு உடல் ரீதியாக சில பிரச்சனை உள்ளது. அதில் சிலர் கொடு நோயால் பாதிக்கப்பட்ட போதும் திரைப்படங்கள் மூலம் நம்மை மகிழ்வித்து வருகிறார்கள். அவ்வாறு உடல் ரீதியான பிரச்சனை கொண்ட ஐந்து வழிகளை பார்க்கலாம்.
நயன்தாரா : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சமீபத்தில் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். நயன்தாராவுக்கு தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ளது. இதற்காக இவர் கேரள ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆங்கில மருந்துகளை எடுத்து வருகிறார்.
சாய் பல்லவி : பிரேமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்திருந்தார். இவருடைய முகத்தில் அதிக முகப்பருக்கள் இருக்கும். ஒரு நேர்காணலின்போது இதைப்பற்றி சாய்பல்லவி இடம் கேட்கும் போது அது முகப்பரு இல்லை, அது ரோசாசியா எனும் நோய். அதாவது ரத்தநாளங்கள் விரிவடையும் நோய் என அவரே கூறியுள்ளார்.
மம்தா மோகன்தாஸ் : குரு என் ஆளு, எதிரி படங்களில் நடித்தவர் மம்தா மோகந்தாஸ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். மம்தா கடந்த 12 வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது பல படங்களை தயாரித்து வருகிறார்.
சமந்தா : கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு பாலிமார்பஸ் லைட் எப்ஷன் என்ற நோய் பாதிக்கப்பட்டு இருந்தது. மிகவும் பளபளப்பான சருமம் உள்ளவர்களுக்கு இந்த நோய் பாதிக்கும். இந்த நோயால் அரிப்பு மற்றும் வலிகள் ஏற்படும். தற்போது இந்நோயிலிருந்து சமந்தா மீண்டும் உள்ளார்.
மனிஷா கொய்ராலா : தமிழ் சினிமாவில் பாம்பாய், இந்தியன், முதல்வன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. கடந்த 2012-ம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு சில வருடங்களில் அந்த நோயிலிருந்து குணம் அடைந்தார்.