சமீபகாலமாக தொடர் சர்ச்சைகளை சந்தித்து வரும் விவாகரத்து நடிகை தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். உருகி உருகி காதலித்து திருமணம் செய்த அந்த பெரிய வீட்டு நடிகரை தற்போது விவாகரத்து செய்து தனிமையில் இருக்கிறார் சமத்து நடிகை.
இஷ்டத்துக்கு நடிக்க கூடாது என்று கணவரும், அவருடைய குடும்பத்தாரும் போட்ட கண்டிஷன் தான் தற்போது நடிகையின் முடிவுக்கு காரணமாக இருக்கிறது. பிரிவிற்கு பிறகு இஷ்டத்திற்கு வாழலாம் என்று நினைத்த நடிகைக்கு அதன் பிறகுதான் தலைவலியே ஆரம்பமானது.
நடிகையின் இந்த விவாகரத்து முடிவை ஏற்காத கணவரின் ரசிகர்கள் நடிகையைப் பற்றி கண்டபடி ட்ரோல் செய்து கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நடிகை தற்போது குத்தாட்டம் போட்ட அந்த படத்தின் தயாரிப்பாளர் உடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறாராம்.
படத்தின் ஹீரோயினுக்கே சம்பளம் குறைவாக இருக்கும்போது ஒரு பாடலுக்கு ஆட வந்த இந்த நடிகைக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்திலும் நடிகை தான் ஹீரோயின். இதுதான் தற்போது டோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.
இப்படி அரசல் புரசலாக வெளிவந்த இந்த செய்தியை பார்த்த கணவரின் ரசிகர்கள் தற்போது நடிகையைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கண்டபடி பேசி வருகின்றனர். மேலும் மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் என்று வெளியிட்டு மோசமான கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகையோ தற்போது பொங்கி எழுந்துள்ளார். அதனால்தான் அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு அளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும் எல்லை மீறினால் அவர்களை சும்மா விடமாட்டேன் என்று எச்சரித்து பதிவிட்டுள்ளாராம்.