வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின்களையை மிரட்டும் பிரபலம்.. பயந்து நடுங்கிய சம்பவம்

தமிழ் சினிமாவில் சகோதரி, அம்மா, பாட்டி என அனைத்து கதாபாத்திரங்களும் திறம்பட நடித்தவர்தான் ஆச்சி மனோரமா. இவர் பெரும்பாலான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். மனோரமாவின் நடிப்பை பார்த்து பல பிரபலங்கள் வியந்துள்ளனர்.

மனோரமா படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களையும் உற்று கவனிக்க கூடியவர். பெரிய நடிகர்களும் சிரமப்படும் காட்சிகளில் கூட மனோரமா அசால்ட்டாக நடித்து முடிப்பார். அதுமட்டுமல்லாமல் படத்தின் சீனை மட்டும் சொன்னால் போதும் அவரே புகுந்து விளையாடி விடுவார்.

மனோரமா என்னதான் நகைச்சுவை நடிகையாக இருந்தாலும் ஹீரோயின் மேக்கப் சரி இல்லை என்றால் மேக்கப் ஆர்டிஸ்ட் மேல் கோபப்படுவாராம். சில சமயம் திட்டியும் உள்ளாராம். அதுவும் சரியில்லை என்றால் ஹீரோயினுக்கு அவரே மேக்கப்பையும் போட்டுவிடுவாராம்.

மனோரமா உடன் நடிக்கும் சக நடிகர்கள் நன்றாக நடிக்காவிட்டாலும் முகத்தை பார்த்து நேராகவே சொல்லிவிடுவாராம். இதனால் அவருடன் நடிக்கும் பல நடிகர், நடிகைகள் மனோரமாவை பார்த்தால் பயந்து நடுங்குவார்கலாம்.

அதுமட்டுமல்லாமல் இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆச்சி மனோரமாவிடம் காட்சியை காட்டி ஒப்பினியன் வாங்கிக் கொள்வார்கள். அவர் அந்த காட்சிக்கு ஓகே சொன்னால்தான் அடுத்த படப்பிடிப்பிற்கு செல்வார்களாம். தற்போது பல நடிகைகள் வந்தாலும் ஆச்சி மனோரமா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

Trending News