தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் அந்த பிரபல நடிகை பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஹீரோக்களுக்கு இணையான அந்தஸ்தில் பெரும் புகழையும், பெயரையும் கொண்ட அந்த நம்பர் நடிகைக்கு தற்போது பெரும் சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.
அதாவது நடிகை தன் காதலர் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தில் நடிகையுடன் ஏற்கனவே இரண்டு திரைப்படங்களில் இணைந்து நடித்து இருந்த மக்கள் செல்வனும் நடித்திருந்தார். தற்போது இதில் தான் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல நாட்களாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பிற்காக ஹீரோ ஏகப்பட்ட தேதிகளை ஒதுக்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அதையெல்லாம் இயக்குனர் வீணடித்து விட்டதாக நடிகர் கோபத்தில் இருக்கிறாராம். அவரை சமாதானப்படுத்த முயன்ற நடிகைக்கும் தோல்வி தான் கிடைத்தது.
இதனால் கடுப்பில் இருந்த நடிகைக்கு அதை ஏற்று விதமாக மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகையுடன் இணைந்து அவரின் போட்டி நடிகையாக பார்க்கப்பட்ட விவாகரத்து நடிகையும் நடித்திருந்தார். இதை திரையுலகமே ஆச்சர்யமாக பார்த்தது.
மேலும் இரண்டு நடிகைகளும் நட்பாக பழகும் போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவை வெளியாகி வந்தது. அட இப்படி ஒரு நட்பா என்று அனைவரும் வியந்து பார்த்த வேளையில் தான் விவாகரத்து நடிகை தன் வேலையை காட்டியுள்ளார். ஏற்கனவே இவரைப் பற்றி பல சர்ச்சைகள் வெளிவந்துள்ளது.
அதில் லேட்டஸ்டாக இவர் நம்பர் நடிகையின் காதலருடன் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறாராம். அதை கண்டும் காணாமல் இருந்து வந்த நம்பர் நடிகைக்கு சில தினங்களுக்கு முன் அவர்கள் இருவரும் நள்ளிரவு பார்ட்டியில் கலந்து நெருக்கம் காட்டியது புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே நம்பர் நடிகையின் வாழ்வில் பல காதல் தோல்விகள் இருக்கிறது. தற்போது கிடைத்துள்ள இந்த காதலாவது திருமணத்தில் முடிய வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க காதலரோ இப்படி விவாகரத்து நடிகையுடன் ஒட்டிக்கொண்டது அவரை கலங்க வைத்துள்ளது.
இதனால் யோசித்த நடிகை தற்போது விவாகரத்து நடிகையிடம் சென்று தன் காதலரை விட்டு தள்ளி இருக்கும் படி கேட்டுள்ளார். ஏற்கனவே டான்ஸ் மாஸ்டருடன் திருமணம் வரை சென்ற நடிகை சில காரணங்களால் அதை நிறுத்தினார். தற்போது காதலரின் இந்த துரோகத்தால் அவர் இந்த திருமணத்தையும் நிறுத்த கூட தயங்க மாட்டார் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.